நாகப்பட்டினத்தை அடுத்த பாப்பாக்கோவில், திடீர்நகர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். விடுதலை சிறுத்தைகள் (Viduthalai Siruthai party) கட்சியின் கிளை செயலாளரும் ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு அனுசுயா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ஜனவரி 14-ம் தேதி பொங்கல் அன்று அதிகாலை ராஜ்குமார் உடல் கருகிய நிலையில் அவரது மாமியார் வீட்டின் முன்பு இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் கொலை வழக்குப் பதிவுசெய்து பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் எந்த தகவலும் கிடைக்காததால் ராஜ்குமாரின் மனைவி மற்றும் மாமியாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பொதுமக்கள் இணைந்து குற்றவாளியை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் விசாரணையில் ராஜ்குமாரின் மனைவி அனுசுயாவை சந்தேகப்பட்டு துன்புறுத்தி வந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்து தனது தாய் நிர்மலாவுடன் சேர்ந்து இரவு உணவில் அதிகளவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்ததும், பின்னர் ராஜ்குமார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் சமையலுக்காக வைத்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அனுசுயா, நிர்மலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வி.சி.க பிரமுகர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மனைவி மாமியார் கைது செய்யப்பட்டிருப்பது நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ALSO READ | பள்ளி மாணவிகளை கடத்திய டியூஷன் ஆசிரியர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR