தாயையும், 14 வயது தம்பியையும் கொன்ற இளைஞர்... இரட்டை கொலையின் பகீர் பின்னணி...!

Chennai Crime Latest News: சென்னையில் தாயையும், 14 வயது தம்பியையும் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் முழு பின்னணியை இங்கு காணலாம்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 22, 2024, 09:53 AM IST
  • கொலை செய்ததை வாய்ஸ் மெசேஜ் மூலம் உறவினருக்கு தெரிவித்துள்ளார்.
  • அவரது தாயார் அக்குபஞ்சர் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
  • கொலையின் பின்னணி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயையும், 14 வயது தம்பியையும் கொன்ற இளைஞர்... இரட்டை கொலையின் பகீர் பின்னணி...!  title=

Chennai Crime Latest News: சென்னை திருவொற்றியூர் திருநகர் பகுதியை சேர்ந்தவர் பத்மா (45). இவர் அக்குபஞ்சர் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரின் கணவர் முருகன் ஓமன் நாட்டில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் நிதீஷ் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார், இளைய மகன் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில் நிதீஷ் நேற்று முன்தினம் (ஜூன் 20) இரவு 10 மணியளவில், அவரது பெரியம்மாவின் மகளான அக்கா மகாலட்சுமி வீட்டிற்கு சென்று தன்னுடைய பையில் செல்போன், அவர்கள் வசித்து வந்த வீட்டின் சாவி ஆகியவற்றை வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி உள்ளார். 

அதிர்ச்சி அளித்த வாய்ஸ் மெசேஜ்

இதனை தொடர்ந்து நிதீஷ் வெளியேறும் போது தனது செல்போனையும் அக்காவின் வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று (ஜூன் 21) மகாலட்சுமி நிதீஷின் செல்போனை ஆன் செய்து பார்த்தபோது அதில் அவர் சில வாய்ஸ் மெசேஜ்களை வைத்துள்ளார். அதில் தனது அம்மாவையும் தம்பியையும் தான் கொலை செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க | மாங்காடு அருகே சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்...!!

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி நிதீஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். உள்ளே சென்ற போது அங்கே பத்மாவின் உடலும் 14 வயதான சஞ்சையின் உடலும் கொலை செய்யப்பட்ட நிலையில் கோணி மூட்டையில் சுற்றப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கவே இரவு பணியில் இருந்த சென்னை புது வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் நேரில் வந்து விசாரணையை தொடங்கி உள்ளார். 

போதையில் தூங்கிக்கொண்டிருந்தபோது கைது...

தொலைபேசி மூலம் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையரின் தனிப்படையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் நிதீஷை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், திருவெற்றியூர் குப்பம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் உள்ள பழுதடைந்த கப்பலில் நிதீஷ் போதையில் படுத்துறங்கி இருப்பது தெரியவந்தது. அவரை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் கைது செய்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகிறார்கள் 

நிதீஷ் எந்த காரணத்திற்காக தன் தாயையும் தம்பியையும் கொலை செய்தார் என போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் நானும் இறக்கப்போவதாகவும் அதனால் தான் போகும் போது அம்மாவையும் தம்பியையும் அழைத்துச் சென்றேன் என அவர் அனுப்பிய வாய்ஸ் மெசேஜில் குறிப்பிட்டுள்ளார். 

கொலை செய்ததன் பின்னணி...

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 14 அரியர் இருப்பதால் நிதீஷை தாய் பத்மா அந்த அனைத்து பேப்பரையும் கிளியர் செய்யும்படி கண்டித்துள்ளார் இதனால் தாய் பத்மாவுக்கும் நிதீஷூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. 

ஏற்கனவே நிதீஷ் இரண்டு மாதங்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து சமாதானம் செய்திருக்கின்றனர். மீண்டும் தாய் பத்மா நிதீஷை அந்த 14 அரியர் பேப்பரை முடிக்க சொல்லி சண்டையிட்டு இருக்கிறார். இதில் ஆத்திரம் அடைந்த நிதிஷ் தாய் பத்மாவை கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று திட்டம் தீட்டு இருக்கிறார்.

இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு கத்தியை வாங்கி வந்து தாய் பத்மாவை குத்தி கொலை செய்ததாகவும், அப்போது சத்தம் கேட்டு தம்பி ஓடி வந்ததால் பதட்டத்தில் அவரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும், தற்கொலை செய்து கொள்ள முடியாமல் பயத்தில் இருந்ததால் மது அருந்திவிட்டு கடலில் குதித்து விடலாம் என்று கடற்கரைக்கு  சென்றிருக்கிறார் அப்போது மது போதையில் படகில் விழுந்து விட்டு உறங்கிக் கொண்டிருக்கும்போது போலீசார் கைது செய்ததாக விசாரணையில் தெரிய வருகிறது.

மேலும் படிக்க | சாம்பாரில் கரப்பான் பூச்சி: பொதுமக்கள் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News