Zee Digital TV: 6 வெவ்வேறு மொழிகளில் 14 செய்தி சேனல்களுடன் 26 ஆண்டுகள் பழமையான செய்தி நெட்வொர்க். 220 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் 362 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களையும் கொண்டுள்ள செய்தி ஊடகம் Zee Media.
உள்ளடக்க உருவாக்கம், பேக்கேஜிங் மற்றும் ஒளிபரப்பு ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய PAN இந்தியா செய்தி நிறுவனம் ஜீ மீடியா.
செய்திப் பணியகங்கள் மற்றும் நிருபர்களுடன் வேகமாக வளர்ந்து வரும் செய்தி சேனல்களில் ஒன்றான ஜீ மீடியா, காம்ஸ்கோரின் (digital data analysis company) பொதுச் செய்தி வகையின்படி, டிஜிட்டல் தளத்தில் ஜீ குழுமம் இந்தியாவின் நம்பர் 1 செய்தி நெட்வொர்க். எனவே, ZEE மீடியா இந்திய மக்களால் மிகவும் நம்பப்படும் நெட்வொர்க்குகளில் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது.
இப்போது, தென்னிந்தியாவில் கன்னடம், தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய 4 மொழிகளில் பிராந்திய செய்தி சேனல்களை தொடங்குகிறோம்.
இவை தொலைகாட்சியின் நேரலை வடிவமாக இருக்கும், அவை அந்தந்த இணையதளங்களில் வெளியாகும். YouTube மற்றும் OTT இயங்குதளங்களில் சேனல்கள் தானாகவே கிடைக்கும்.
ஒவ்வொரு தென்னிந்திய குடும்பத்தையும் சென்றடைய விரும்பும் ஜீ குழுமம், இந்த சேனல்களைத் தொடங்குகிறது. மக்களை அவர்களின் சொந்த மொழியில் சென்றடைய விரும்புகிறோம்.நாடு மற்றும் உலகம் முழுவதும் மட்டுமல்ல, அவர்களின் மாநிலங்களின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.
டிஜிட்டல் சேனல்களாக இருப்பதால் அதன் வீச்சும், உள்ளடக்கங்களின் அளவும் அபரிமிதமாக இருக்கும். தென்னிந்திய மக்கள் செய்திகளுக்காக டிஜிட்டல் முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் சேனலின் நம்பர் 1 தேர்வாக ஜீ ஊடகம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். டிஜிட்டல் ஊடகங்களிலும் பல போலிச் செய்திகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு நிகழ்வின் சரிபார்க்கப்பட்ட விவரங்களைப் பெற பார்வையாளர்களுக்கு நம்பகமான தளமாக இருக்க விரும்புகிறோம்.
விந்திய மலைகளுக்குத் தெற்கே, தென்னிந்திய செய்திச் சந்தையில் இந்த லட்சியத் திட்டத்துடன் ஜீ நுழைகிறது. ஜீ மீடியா கார்ப்பரேஷனின் ZEE தமிழ் News, ZEE கன்னடா News, ZEE மலையாளம் News மற்றும் ZEE தெலுங்கு News ஆகிய நான்கு சேனல்களும், மக்களால் எதிர்பார்க்கப்படும் 'அச்சமற்ற' மற்றும் 'பக்கச்சார்பற்ற' செய்திகளைக் கொடுக்கும்.
தென்னிந்திய மக்கள் பாரபட்சமற்ற மற்றும் நேரடியான செய்திகளுக்காக ஆவலுடன் இருக்கின்றனர். அரசியல் சேனல்கள் அல்லது கட்சி பின்னணியைக் கொண்ட சேனல்கள் ஆதிக்கம் செலுத்தும் சந்தையில் Zee ஒரு புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தைக் கொண்டுவரும்.
தென்னிந்தியாவிலும், தேசிய அளவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் வாழ்க்கை முறை நிகழ்ச்சிகளுடன் சமூக, அரசியல் பிரச்சினைகள் பற்றிய விரிவான மற்றும் பாரபட்சமற்ற செய்திகளை எங்கள் பயனர்களுக்கு வழங்குவோம்.
ALSO READ | முதல் முறையாக தென்னிந்திய மொழிகளில் டிஜிட்டல் டிவி
நாட்டின் மற்ற பகுதிகளை விட சராசரியாக பயனர்களின் வாங்கும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் வருவாய்க்கான வாய்ப்புகள் அபரிமிதமாக தென்னிந்தியாவில் அதிகமாக உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
டிஜிட்டல் இந்த பண்புகளை முன்னோக்கி செலுத்தும் வளர்ச்சி இயந்திரமாக இருக்கும். உள்ளடக்க உத்தி மற்றும் வருவாய் வாய்ப்புகளின் அடிப்படையில் இது எங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கும்.
டிஜிட்டல் செய்தித் துறையில் புதிய வீரர்களாக, நாங்கள் தென்னிந்தியாவில் காலடித்தடம் பதிக்கிறோம். இந்தத் திட்டம் மாபெரும் வெற்றியடையும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
நான்கு தென் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் டிஜிட்டல் டிவி ஒளிபரப்பை ZEE MEDIA தொடங்குகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR