ஸ்பேஸ் எக்ஸ் நாசா க்ரூ ட்ராகன் ஏவப்பட்டது வரலாற்று சிறப்புமிக்கது என்பதற்கான ஐந்து காரணங்கள்...
ஃப்ளோரிடாவின் ஸ்பேஸ் கடற்கரை அருகே உள்ள பூங்காங்கள், சாலைகள் மற்றும் கடற்கரைகளில் மக்கள் கூடியிருந்தனர். சனிக்கிழமையன்று இரண்டு விண்வெளி வீரர்களை சுற்றுவட்டப்பாதைக்கு ஏவியது உண்மையிலேயே வரவேற்கத்தக்க சாதனை தான். கொரோனா பெருந்தொற்றின் சிக்கல், பொருளாதார பிரச்சினைகள் மற்றும் சாலைகளில் காணப்பட்ட போராட்டங்களுக்கு இடையில் இது ஆறுதலான விஷயமாக இருந்தது.
சனிக்கிழமையன்று எலான்முஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் புவியில் இருந்து இரண்டு அமெரிக்கர்களை ஏற்றிக்கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்தது உண்மையிலேயே வர்த்தக ரீதியிலான விண்வெளி பயணத்திற்கான புதிய காலத்தை முன்னறிவிப்பதாக அமைந்தது. கடந்த பத்தாண்டுகளில் முதன்முறையாக அமெரிக்க மண்ணில் இருந்து விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிக்கு நாசா மீண்டும் திரும்பியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நாசா க்ரூ ட்ராகன் ஏவப்பட்டது ஏன் வரலாற்று சிறப்புமிக்கது என்பதை பார்க்கலாம்.
இந்த சாதனை மூலம் மக்களை சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பும் முதலாவது தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் அமைந்துள்ளது. முன்னதாக இவ்வாறாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா அரசாங்கங்கள் மட்டுமே ஏவியிருந்தன.
இந்த வெற்றிகரமான ஏவுதலுக்கு பிறகு, விண்வெளி நிலையத்திற்கென பணிபுரியும் செயல்பாடுகளுக்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குற்கு நாசா சான்றளிக்கும்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப வேன்டும் என்பதை இலக்காக கொண்டு மஸ்க் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் டெக்னாலஜிஸ் கார்ப் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை 18 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதற்கு பிறகு, இது ஏவப்பட்டுள்ளது.
நாசா 9 ஆண்டுகள் விண்வெளிக்கு ஏவாமல் இருந்த நிலையை இது போக்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப நாசா, கஸகஸ்தானில் இருந்து ரஷ்ய விண்கலங்களின் உதவியை மட்டுமே நம்பியிருந்தது.
எலான்முஸ்கின் இந்த சாதனை என்பது, மற்றொரு சாதனையாக அமைந்துள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை பயன்படுத்தி, விண்வெளி பயணத்தை விலை குறைவாகவும், அடிக்கடி பயணிக்கும் சூழலை சாதனை புரிந்துள்ளது.
- மொழியாக்கம் ஆ. நிவாஸ்.