ட்விட்டர் வாசிகளுக்கு அடுத்து ஒரு இன்ப அதிற்சி அளிக்கும் வகையினில், புதியதொரு மாற்றத்தினை தனது வாடியக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது ட்விட்டர்.
ஒருவாரத்திற்கு முன்னதாக, டிவிட்டரில் கருத்துகளை பதிய 280 எழுத்துக்கள் வரை தளர்வு அளிக்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்தது. இதனையடுத்து மீண்டும் ஒரு மாற்றத்தை புகுத்தியுள்ளது ட்விட்டர்.
அதன்படி ட்விட்டர் வாடிக்கையாளர்கள் தங்களது பெயரினை 50 எழுத்துக்கள் வரை நீட்டிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. முன்னதாக 20 எழுத்துக்கள் அளவை கொண்டிருந்த இந்த வசதி, தற்போது 50 எழுத்துக்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது பயனர்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது.
பெயர் மாற்றத்தினால் தங்களுடைய கணக்கில் எந்த மாற்றமும் நிகழாது எனவும், அக்கணக்கினை பின்தொடர்வோர் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் நிகழாது எனவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.
Starting today, your Twitter display name can be up to 50 characters in length! Go ahead, add that middle name or even a few more emojis. https://t.co/QBxx9Hnn1j
— Twitter Support (@TwitterSupport) November 10, 2017
பெயர் மாற்றம் என்னும் பட்சத்தில், பயனர் தங்களுடைய பெயர்களும் சிறப்பு முகப்பாவ பொம்மைகள் போன்றவற்றை இணைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது!