ஆதார் கார்டில் செல்போன் எண் மாற்ற வேண்டுமா? தபால்காரரே வீடு தேடி வருவார் - எப்படி?

Aadhaar card: ஆதார் கார்டில் உங்களுக்கு செல்போன் எண் மாற்ற வேண்டிய தேவை இருந்தால், தபால்காரரை வீட்டிற்கு வரவழைத்து மாற்றிக் கொள்ள முடியும். இந்த சேவையை இந்திய அஞ்சல் துறை வழங்குகிறது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 5, 2024, 03:18 PM IST
  • ஆதாரில் மொபைல் எண் அப்டேட் செய்ய வேண்டுமா?
  • வீடு தேடி வந்து சேவை அளிக்கும் இந்திய அஞ்சல் துறை
  • வீட்டிலேயே உங்கள் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
ஆதார் கார்டில் செல்போன் எண் மாற்ற வேண்டுமா? தபால்காரரே வீடு தேடி வருவார் - எப்படி? title=

அதார்கார்டு அப்டேட்

ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்ற வேண்டிய அவசியம் பலருக்கு ஏற்படுவதுண்டு. அதில் முக்கியமான ஒன்று செல்போன் எண். செல்போன் எண் மாற்றம் செய்ய வேண்டுமானால், ஆதார் மையத்திற்கு நேரில் சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும். ஆனால், அந்த மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். வயதானவர்கள், வேலைக்கு செல்வோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு அது மிகவும் சிரமமானதாக இருக்கும்.

மேலும் படிக்க | Metaverse-ல் 16 வயது சிறுமி கும்பல் பலாத்காரம்.. விசாரிக்கும் காவல்துறை! முழு விஷயம் என்ன?

இந்திய அஞ்சல்துறை சேவை

இந்த சிரமத்தை தவிர்க்க, இந்திய தபால் துறை ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஆதார் கார்டில் உள்ள செல்போன் எண்ணை மாற்ற வேண்டுமானால், https://ippbonline.com/web/ippb/ippb-customers என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அந்த இணையதளத்தில், "Door step banking service request form" என்பதை ஓபன் செய்து, "Aadhar Mobile Update" என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் கேட்கப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டும். அதில், "Any specific request" என்ற இடத்தில், "Aadhar Mobile Update" என்ற இடத்தில் புதிய செல்போன் எண்ணை கொடுத்து, "Submit" பட்டனை அழுத்த வேண்டும்.

அதிகாரி வீடு தேடி வருவார்

உங்கள் பதிவு வெற்றிகரமாக இருந்தால், "Your Submission has been Successful" என்ற செய்தி வரும். உங்கள் தகவல்கள் அனைத்தும் தபால் அலுவலகத்திற்கு சென்று சேரும். அங்கிருந்து தபால்காரர் வீட்டுக்கே வந்து கைரேகையை வாங்கிக் கொண்டு, உங்கள் ஆதாரில் உள்ள செல்போன் எண்ணை மாற்றி தருவார். இந்த சேவையானது, ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்ற வேண்டியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, வயதானவர்கள், வேலைக்கு செல்வோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு இந்த சேவை மிகவும் உதவியாக இருக்கும்.

இப்படியான தகவல் தெரியாதவர்கள் இனி இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். ஆன்லைன் மூலம் தபால்காரரை வீட்டுக்கு அனுப்பி ஆதாரில் செல்போன் அப்டேட் செய்து கொடுக்கும் இந்திய அஞ்சல் துறையின் இந்த திட்டம் குறித்த தகவல் பலருக்கும் இதுவரை தெரிந்திருக்கவில்லை. இனி உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | எகிறிய ஜியோ யூசர் எண்ணிக்கை..! ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா சரிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News