தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி!!

மதுரையில் நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர்,

Last Updated : Jan 27, 2019, 01:43 PM IST
தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி!! title=

மதுரையில் நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர்,

வணக்கம் என்று கூறி தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, உலக தரத்தில் இந்திய மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதே எங்களின் நோக்கம். நாட்டின் 4 திசைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தனது சேவை வழியே தனி இடத்தினை பெற்றுள்ளது.

மதுரை, நெல்லை மற்றும் தஞ்சையில் பன்னோக்கு மருத்துவ பிரிவுகள், உயர் சிகிச்சை மையங்களை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  இதனால் கன்னியாகுமரியை சேர்ந்தவர்களும் பயனடைவர். கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் 30% மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,320 சுகாதார நிலையங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளன.  

இதன்பின்பு அவர் நன்றி, வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை முடித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் 201.75 ஏக்கரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் செயல்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்று தென்னிந்தியாவில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்தது. அந்தவகையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, ரூ.1,264 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிகள் தொடங்கின. இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி, காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வந்தடைந்தார். விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக கவர்னர், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளவுந்தராஜன் ஆகியோர் மலர் கொத்து வழங்கி வரவேற்றனர். 

இதைதொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகான அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி சாலை வழியாக சென்றார். மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் 201.75 ஏக்கரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

Trending News