ஏர்டெல் 5ஜி அறிமுகம்: சேவையைப் பயன்படுத்த புதிய 5ஜி சிம் தேவையா?

5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் புது சிம்கார்டு வாங்க வேண்டுமா? என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 12, 2022, 11:50 AM IST
  • ஏர்டெல் நிறுவனத்தின் 5 ஜி சேவை
  • முக்கிய நகரங்களில் விரைவில் தொடக்கம்
  • புதிய போன் வாங்க வேண்டும்; சிம் கார்டு?
ஏர்டெல் 5ஜி அறிமுகம்: சேவையைப் பயன்படுத்த புதிய 5ஜி சிம் தேவையா? title=

இந்தியாவில் அடுத்தலைமுறை இணையசேவையான 5ஜி விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களின் 5ஜி சேவையை போட்டிப் போட்டு தொடங்க இருக்கின்றன. இது குறித்து அண்மையில் பேசிய ஏர்டெல் நிர்வாகி, தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் விரைவில் ஏர்டெல் 5ஜி பயன்பாட்டுக்கு கொண்டுவர முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். டெல்லி, மும்பை, சென்னை மற்றும் இன்னும் சில முக்கிய மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களுக்கு அக்டோபரில் 5ஜி சேவை ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | சாம்பலை பூசிக்கொண்ட கூகுள் - இதுதான் காரணம்...

2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற இந்தியா முழுவதையும் அதன் 5G நெட்வொர்க்குடன் இணைக்கவும் ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மக்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. மொபைல் மற்றும் சிம்கார்டுகளை மாற்ற வேண்டுமா? என்பது பலரின் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. இந்த கேள்விகளுக்கு ஏர்டெல் நிறுவனம் அண்மையில் விளக்கம் கொடுத்துள்ளது. அதன்படி, ஏர்டெல் கொடுத்துள்ள விளக்கத்தில் அனைவரும் மொபைல் மாற்றத் தேவையில்லை எனக் கூறியுள்ளது. 

உங்கள் நகரத்தில் எப்போது 5ஜி சேவை தொடங்கப்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ள ஏர்டெல், 5ஜி சேவை இருக்கும் நகரங்களில் 5ஜி மொபைலை வாங்குமாறு தெரிவித்துள்ளது. இணைய சேவை 4ஜியை விட பன்மடங்கு அதிகம் இருக்கும என்றும், அனுப்புதல் மற்றும் டவுன்லோடு, கேமிங் விளையாடுதல் ஆகியவை எல்லாம் புதிய அனுபவத்தை கொடுக்கும் என விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால், புதிய சிம்கார்டு வாங்கத் தேவையில்லை என கூறியுள்ள ஏர்டெல், தற்போது இருக்கும் சிம்கார்டை அப்கிரேடு மட்டும் செய்தால் போதும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Amazon சேலில் டெக்னோ போன்களுக்கு பம்பர் தள்ளுபடி: முந்துங்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News