சாம்பலை பூசிக்கொண்ட கூகுள் - இதுதான் காரணம்...

இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி, கூகுள் நிறுவனம் தனது லோகோவை சாம்பல் நிறத்தில் மாற்றியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 11, 2022, 02:02 PM IST
  • ஜார்ஜ் புஷ் மறைவின்போது, கூகுள் லோகா சாம்பல் நிறத்திற்கு மாறியது.
  • கூகுள் சிஇஓ மகாராணி 2ஆம் எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
  • நாளை மகாராணியின் இறுதிசடங்கு நடைபெறுகிறது.
சாம்பலை பூசிக்கொண்ட கூகுள் - இதுதான் காரணம்... title=

நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை என தினமும் வண்ணமையாக தோற்றமளிக்கும் 'கூகுள்' லோகோ, இன்று சாம்பல் நிறத்தில் மாறியுள்ளது.வழக்கமாக, பிரபலங்களை சிறப்பிப்பதற்கும், பிரத்யேக நாள்களுக்கும் கூகுள் நிறுவனம் டூடுலை வெளியிடும். நாம் கூகுளில் தேடும்போது டூடுலை கிளிக் செய்தால், அந்த டூடுல் குறித்த தகவல்கள் நம்முன் காட்டப்படும். 

ஆனால், இன்று சாம்பல் நிறத்தில் இருக்கும் கூகுள் லோகோவை கிளிக் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் மறைவையொட்டி, தனது தூக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக தனது லோகைவை சாம்பல் நிறத்திற்கு கூகுள் நிறுவனம் மாற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கூகுளில் வேலைக்கு சேர்ந்த ஆடுகள் - சுற்றுச்சூழல் மாசை தடுக்க பலே திட்டம்

முன்னதாக, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பதிவிட்ட ட்வீட் அதற்கான பதிலை அளித்துள்ளது. அந்த ட்வீட்டில்,"மகாராணி 2ஆம் எலிசபெத் மறைவுக்கு இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் இருந்து தங்களின் துக்கத்தை வெளிப்படுத்திவரும் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். உறுதியான தலைமைத்துவமும், பொதுச்சேவையும் அவரின் வாழ்நாள் முழுவதும் நீடித்தது" என பதிவிட்டிருந்தார். 

'Memorial Day' போன்ற நாள்களில் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்தவர்களை நினைவுகூரும் போது, கூகுள் தனது சாம்பல் நிற லோகோவை பயன்படுத்தும். மேலும், முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், 2018ஆம் ஆண்டு மறைந்தபோது கூகுள் தனது லோகோவை சாம்பல் நிறத்தில் மாற்றியிருந்தது.  கடந்த செப். 8ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் தனது 96 வயதில் இரண்டாம் எலிசபெத் மகாராணி காலமானார். அவரின் இறுதிச்சடங்கு நாளை (செப் 12) நடைபெற இருக்கிறது.

மேலும் படிக்க | இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News