ஒரு மாதத்திற்கு 60 GB டேட்டா! புதிய ரீசார்ஜ் திட்டங்களுடன் அசத்தும் ஏர்டெல்!

ஏர்டெல் வழங்கும் இரண்டு ப்ரீபெய்டு திட்டங்களும் 50ஜிபி மற்றும் 60ஜிபி மொத்த டேட்டாவை கொண்டுள்ளதோடு ஒரு மாத காலம் வேலிடிட்டியுடன் வருகிறது.     

Written by - RK Spark | Last Updated : Feb 6, 2023, 06:16 PM IST
  • ரூ.489 ப்ரீபெய்டு திட்டமானது, 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
  • டேட்டா வரம்பை மீறினால் 1 எம்பி டேட்டாவிற்கு 50 பைசா வசூலிக்கப்படும்.
  • விங்க் மியூசிக் மற்றும் ரூ.100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஒரு மாதத்திற்கு 60 GB டேட்டா! புதிய ரீசார்ஜ் திட்டங்களுடன் அசத்தும் ஏர்டெல்! title=

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இந்திய வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த இரண்டு புதிய திட்டங்களின் விலைகள் முறையே ரூ.489 மற்றும் ரூ.509 ஆகும், மேலும் இந்த இரண்டு திட்டங்களும் 50ஜிபி மற்றும் 60ஜிபி மொத்த டேட்டாவை கொண்டுள்ளதோடு ஒரு மாத காலம் வேலிடிட்டியுடன் வருகிறது. ஏர்டெல் வழங்கும் இந்த ரூ.489 விலை மதிப்புள்ள ப்ரீபெய்டு திட்டமானது, 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.  இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும், 50ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  ஒரு நாளைக்கான எஸ்எம்எஸ் வரம்பை நீங்கள் மீறிவிட்டால் ஒரு எஸ்எம்எஸ்-க்கு ரூ.1 வசூலிக்கப்படும் மற்றும் ஒரு நாளைக்கான டேட்டா வரம்பை மீறினால் 1 எம்பி டேட்டாவிற்கு 50 பைசா வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க | பிஎஸ்என்எல் ரூ. 769 ரீசார்ஜ் பிளான்: அன்லிமிடெட் அழைப்பு, டேட்டா... எக்கச்சக்க அம்சங்கள்

அடுத்ததாக ஏர்டெல் வழங்கும் ரூ.509 விலை மதிப்புள்ள இந்த ப்ரீபெய்டு திட்டமானது ஒரு மாத கால வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள், 60 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  ஒரு நாளைக்கான எஸ்எம்எஸ் வரம்பை நீங்கள் மீறிவிட்டால் ஒரு எஸ்எம்எஸ்-க்கு ரூ.1 வசூலிக்கப்படும் மற்றும் ஒரு நாளைக்கான டேட்டா வரம்பை மீறினால் 1 எம்பி டேட்டாவிற்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் உங்களுக்கு கூடுதலாக அபல்லோ 24|7 சர்க்கிள்-க்கு 3 மாத இலவச சந்தா, பாஸ்டேக், இலவச ஹெலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் மற்றும் ரூ.100 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.  ட்ராய் வெளியிட்ட டேட்டாக்களின்படி, ஏர்டெல் 1 மில்லியன் செயலில் உள்ள சந்தாதாரர்களை சேர்த்துள்ளது,

ஏர்டெல் வழங்கக்கூடிய இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களும் ஏற்கனவே ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மற்றும் ஏர்டெல் இணையதளத்தில் மொபைல் ரீசார்ஜ்களுக்குக் கிடைக்கின்றது.  மேலும் ஏர்டெல் ஜியோவுக்கு போட்டியாக ரூ.296 விலையில் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது.  30 நாட்கள் வேலிடிட்டியுடன் ஏர்டெல் வழங்கும் இந்த திட்டமானது அன்லிமிடெட் அழைப்புகள், மொத்த 25 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  மேலும் அப்பல்லோ 24|7 சர்க்கிள், பாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்றவற்றிற்கான இலவச சந்தாவை வழங்குகிறது.

மேலும் படிக்க: அரசு வழங்கிய குட் நியூஸ்: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி விலை குறையும், அள்ளிட்டு போகலாம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News