₹181-க்கு தினம் 3GB டேட்டா; Airtel-ன் அதிரடி offer!

டெலிக்காம் ஜாம்பவான் Airtel தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புது திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் படி ₹181-க்கு தினம் 3GB டேட்டா வழங்கப்படும் என அறிவித்துள்ளது!

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Oct 1, 2018, 12:48 PM IST
₹181-க்கு தினம் 3GB டேட்டா; Airtel-ன் அதிரடி offer!
Representational Image

டெலிக்காம் ஜாம்பவான் Airtel தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புது திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் படி ₹181-க்கு தினம் 3GB டேட்டா வழங்கப்படும் என அறிவித்துள்ளது!

கவர்சியான திட்டங்களை தொடர்ந்து வழங்கிவரும் Airtel நிறுவனம் தற்போது ₹181-க்கு புதுதிட்டத்தினை அறிவித்துள்ளது. இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு...

  • வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் (உள்ளூர்/ வெளியூர்)
  • தினம் 100 குறுஞ்செய்தி.
  • 3GB(2G/ 3G/ 4G) மொபைல் டேட்டா. கிடைக்கும். மேலும் இவையனைத்தும் 14 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கும் என அறிவித்துள்ளது.

14 நாட்களுக்கு தினம் 3GB டேட்டா எனும் பட்சத்தில் ஆக மொத்தம் 42GB டேட்டா கிடைக்கிறது. அதாவது ₹181-க்கு 42GB டேட்டா ஆகும். இந்த கணக்கின்படி பார்த்தால் 1GB டேட்டாவிற்கு ஆகும் செலவு ₹4.3 தான்!

விலைகுறைவாக கிடைத்துள்ள இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு கிடைக்குமா என்பது கேள்விகுறி தான். காரணம் Jio-வின் ₹198 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 

  • 2GB(4G) டேட்டா, 
  • வரம்பற்ற இலவச குரல் அழைப்புகள் (உள்ளூர்/ வெளியூர்)
  • தினம் 100 குறுஞ்செய்தி. ஆகியவை 28 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது.

28 நாட்களுக்கு தினம் 2GB டேட்டா எனும் பட்சத்தில் ஆக மொத்தம் 56GB டேட்டா கிடைக்கிறது. அதாவது ₹198-க்கு 56GB டேட்டா ஆகும். இந்த கணக்கின்படி பார்த்தால் 1GB டேட்டாவிற்கு ஆகும் செலவு ₹.56 தான்! எனவே வாடிக்கையாளர்கள் Jio சேவையின் பக்கம் திரும்பிப்பார்க்க துவங்கியுள்ளனர்!