வீடு தேடி வரும் டிரைவிங் லைசென்ஸ்! விண்ணப்பிக்கும் வழிமுறை

பழைய டிரைவிங் லைசென்ஸூக்கு பதிலாக புதிய டிரைவிங் லைசென்ஸூக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால், வீடு தேடி வரும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 22, 2022, 03:18 PM IST
  • ஆன்லைன் மூலம் டிரைவிங் லைசென்ஸ்
  • ஈஸியாக விண்ணப்பிக்கலாம்
  • லைசென்ஸ் வீடு தேடி வரும்
வீடு தேடி வரும் டிரைவிங் லைசென்ஸ்! விண்ணப்பிக்கும் வழிமுறை title=

Apply Online For Card DL; ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால் அல்லது பழுதாகி இருந்தால் புதிய டிரைவிங் லைசென்ஸூக்கு நேரடியாக ஆர்டிஓ அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பித்து புதிய கார்டுகளை பெற்று வருகின்றனர். ஆர்டிஓ அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிப்பது சிலருக்கு சிரமமாக இருக்கிறது. அவ்வாறு விண்ணபிக்க சிரமப்படுபவர்கள் வீட்டில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பித்து புதிய கார்டுகளை தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு முதல் பிவிசி ஓட்டுநர் உரிம ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கார்டுகள் மழையோ, குளிர்காலமோ, வெயில் காலமோ என எந்த காலமாக இருந்தாலும் சேதமடையாது. குறிப்பாக, தண்ணீரில் நனைந்தால்கூட சேதமடையாது. 

மேலும் படிக்க | Mobile Charging: மின்னல் வேகத்தில் மொபைல் சார்ஜ் ஆக 5 டிப்ஸ்

இந்தக் கார்டு டிரைவிங் லைசென்ஸ் என்பது 64kb நினைவகத்தின் உட்பொதிக்கப்பட்ட நுண்செயலி சிப்பைக் கொண்ட டேம்பர் ப்ரூஃப் பிளாஸ்டிக் கார்டு ஆகும். இது உங்கள் எல்லா தகவல்களையும் சேமித்து வைத்திருக்கும். இந்த கார்டை டூப்ளிகேஷன் செய்ய முடியாது. எனவே இது முற்றிலும் பாதுகாப்பானது. பிவிசி டிரைவிங் லைசென்ஸ் வாங்க வேண்டும் விரும்புபவர்கள் 200 ரூபாய் செலுத்த வேண்டும். உங்கள் இரத்தக் குழு, கட்டைவிரல் மற்றும் கைரேகை, உடல் பதிவுகள் போன்ற உங்களின் அனைத்து பயோமெட்ரிக் தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.

PVC DL-க்கு தேவையான ஆவணங்கள்

வயதுச் சான்று (பிறப்புச் சான்றிதழ், பான் கார்டு, பள்ளிச் சான்றிதழ், பாஸ்போர்ட்), முகவரிச் சான்று (பயன்பாட்டு பில், கட்டணச் சீட்டு, வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட், ஆயுள் காப்பீட்டுக் கொள்கை), மற்றும் ஆதார் அட்டை கட்டாயம். தற்போதைய குடியிருப்பு சான்று

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

* மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இணையதளத்துக்கு செல்லுங்கள்.
* ''Online Services' தேர்ந்தெடுத்து ’Driving License தொடர்பான சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
* உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து பின்னர் RTO அலுவலகத்தை தேர்ந்தெடுக்கவும்.
* உங்களிடம் கற்றல் உரிமம் இருக்க வேண்டும். அது இருந்தால், Apply Online தேர்தெடுத்து 'New Driving License' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
* அங்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும். புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* இப்போது RTO அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய ஷெட்யூல் லிஸ்ட் உங்களுக்கு வரும். அதனை சரியாக முடிக்க வேண்டும்.
* இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றவுடன் உங்கள் SCDL-ஐ தபால் மூலம் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | Laptop Tips: இதை செய்தால் ஹேக்கர்களுக்கே நீங்கள் சவால் விடலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News