ரூ 300க்குள் பல ஆபர்களுடன் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்டு திட்டங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிவேக தினசரி டேட்டா, அன்லிமிடெட்  அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 19, 2022, 06:44 PM IST
  • தற்போது 30 நாட்களுக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கிறது.
  • ஏர்டெல் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் 2 திட்டங்களைக் கொண்டுள்ளது.
  • ரிலையன்ஸ் ஜியோ 30 நாள் வேலிடிட்டியுடன் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது.
ரூ 300க்குள் பல ஆபர்களுடன் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்டு திட்டங்கள்! title=

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் அல்லது வோடபோன் ஐடியா போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 300க்குள் சிறந்த ப்ரீபெய்டு திட்டங்களை வழங்குகிறது.  இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் விலைகள் உயர்ந்துள்ளன, இருப்பினும் இவை அதிவேக தினசரி டேட்டா, அன்லிமிடெட்  அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  28 நாட்கள் வேலிடிட்டியுடன் ப்ரீபெய்டு திட்டங்களை வழங்கி வந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டங்களையும் இணைத்துள்ளது.

மேலும் படிக்க | அட நம்புங்க: ரூ. 30,000 லேட்டஸ்ட் போனை வெறும் ரூ.9,499-க்கு வாங்கலாம், அசத்தும் பிளிப்கார்ட்

ஏர்டெல் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்கும் இரண்டு திட்டங்களைக் கொண்டுள்ளது.  இந்த திட்டங்களின் விலைகள் முறையே ரூ.209, ரூ.239 மற்றும் ரூ.265 ஆகும். இவை வெவ்வேறு வேலிடிட்டியுடன்  வருகின்றன. இந்தத் திட்டங்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா,  அன்லிமிடெட்  அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஒரு மாதத்திற்கு இலவசமாக அமேசான் பிரைம் பயன்படுத்தும் வசதியையும் வழங்குகிறது.  ரூ.209 திட்டம் 21 நாட்கள் வேலிடிட்டியுடனும், ரூ 239 திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டியுடனும், ரூ 265 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடனும் வருகிறது.  மேலும் இதன் காலண்டர் மாதத் திட்டத்தின் விலை ரூ. 296 ஆகும், இது 30 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட்  அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 25 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.  டேட்டா காலியானதும் வாடிக்கையாளர்கள் 1எம்பி-க்கு 50 பைசா செலுத்தி பயன்படுத்தலாம்.

ரிலையன்ஸ் ஜியோ 30 நாள் வேலிடிட்டியுடன் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது.  இந்த நிறுவனத்தின் முதல் காலண்டர் மாத திட்டத்தின் விலை ரூ.259 ஆகும், இது தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட்  அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.  டேட்டா முடிந்ததும் இணையத்தின் வேகம் 64kbps ஆக குறையும்.  மேலும் ஜியோவின் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட்  அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.  மேலும் இது ஜியோ மூவிஸ், ஜியோ கிளவுட் உள்ளிட்ட பல்வேறு ஜியோ சேவைகளுக்கான இலவச சந்தாவை வழங்குகிறது.

வோடபோன் ஐடியாவில் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது, இது தினமும் 1ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட்  அழைப்புகளை வழங்குகிறது.  24 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டமானது வி மூவிஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்றவற்றுக்கு இலவச சந்தாவை வழங்குகிறது.  அடுத்ததாக ரூ.299 ப்ரீபெய்ட் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட்  அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  இது பின்கே ஆல்-நைட் அம்சத்துடன் வருகிறது, இது பயனர்களை ஸ்ட்ரீம் செய்யவும், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை டேட்டா இல்லாமல் இணையத்தை பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.

மேலும் படிக்க | ஏர்டெல் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் திருத்தப்பட்டன இனி இந்த பலன்கள் கிடையாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News