நீங்கள் ஓலா - உபெர் டாக்ஸியைப் பயன்படுத்தி எங்காவது சென்றால், இந்தச் செய்தி உங்களுக்கானது. உண்மையில், கூகுளில் பட்டியலிடப்பட்டுள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணின் உதவியை நாடியபோது, உபெர் பயணத்திற்கு ரூ.100 கூடுதலாக வசூலித்த நபர் மோசடிக்கு ஆளானார். அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அந்த நபர் தேடிய நம்பர் போலியானது என்றும், இதனால் ஆன்லைன் மோசடியில் அவருக்கு ரூ.5 லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதீப் சவுத்திரி என்பவர் குருகிராமிக்கு வண்டியை ஊபரில் புக் செய்திருக்கிறார். அதற்கு கட்டணம் 205 ரூபாய் காண்பித்துள்ளது. ஆனால் பணம் செலுத்தும்போது 318 ரூபாய் வசூலித்திருக்கிறது. உடனே இதுகுறித்து பிரதீப் சவுத்திரி வண்டி ஓட்டுநரிடம் தெரிவிக்க, அவர் ஊபெர் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பிரதீப் சவுத்திரியும் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள, மொபைல் எண்ணை கூகுளில் தேடியிருக்கிறார். கூகுளில் இருந்து முதலில் '6289339056' என்ற எண்ணை பெற்றிருக்கிறார். ஆனால் அது உண்மையான ஊபெர் வாடிக்கையாளர் சேவை மைய எண் கிடையாது.
மேலும் படிக்க | Gpay மூலம் ரீசார்ஜ் செய்பவரா நீங்கள்... இனி இந்த பிரச்னை வரும் - ஜாக்கிரதை மக்களே!
அந்த கால் '6294613240' -க்கு டைவர்ட் ஆகி, அதன்பிறகு ராகேஷ் மிஸ்ரா என்ற நபர் '9832459993' என்ற எண்ணில் பேசியிருக்கிறார். அந்த மோசடி நபர் பிரதீப் சவுத்திரியை தவறான வழிநடத்தியுள்ளார். அதாவது, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 'ரஸ்ட் டெஸ்க்' செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்திய அந்த நபர் மொபைலில் இருந்து பணத்தை திரும்ப பெற 'rfnd 112' என்ற செய்தியை அனுப்பச் சொல்லியிருக்கிறார். ஆனால் அதன்பிறகு தான் மோசடியே அரங்கேறியிருக்கிறது.
ஆரம்பத்தில், ரூ.83,760 தொகை அதுல் குமாருக்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து நான்கு லட்சம் ரூபாய், ரூ.20,012, ரூ.49,101 மற்றும் பிற நான்கு பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கிறது. புகார்தாரரின் கூற்றுப்படி, மூன்று பரிவர்த்தனைகள் Paytm மூலமாகவும், ஒன்று PNB வங்கி மூலமாகவும் செய்யப்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையில் புகார் அளித்தார். ஐபிசியின் பிரிவு 420 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66D ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எந்தவொரு வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளும் முன்பும், அது அதிகாரப்பூர்வமான வாடிக்கையாளர் மையமா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | மொபைலில் சிம் கார்டை லாக் செய்வது எப்படி...? பலன்கள் என்ன...?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ