OnePlus Nord வாங்க ஒத்தகாலில் நிக்குறீங்களா... உங்களுக்காவே அமேசானின் பம்பர் தள்ளுபடி!

OnePlus Smartphones: அமேசான் தளத்தில் Oneplus Nord ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும், மொபைலின் சிறப்பம்சங்கள் குறித்தும் இங்கு முழுமையாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 18, 2023, 08:55 AM IST
  • தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கிகளுக்கு சலுகைகள் உள்ளன.
  • இவை தற்போது விற்பனையில் கிடைக்கின்றன.
  • இதில் 5ஜி ஸ்மார்ட்போன்களும் இடம்பெற்றுள்ளன.
OnePlus Nord வாங்க ஒத்தகாலில் நிக்குறீங்களா... உங்களுக்காவே அமேசானின் பம்பர் தள்ளுபடி! title=

OnePlus Smartphones: OnePlus Nord சீரிஸ் ஸ்மார்ட்போன்களை குறைவான விலையில் வாங்க தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, அமேசான் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கிகளின் கார்டுகளின் மீது சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது. 

அந்த வகையைில், OnePlus Nord சீரிஸ்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும், அமேசான் நிறுவனம் நல்ல விற்பனை அம்சங்களுடன் அதுவும் மலிவு விலையில் வழங்குகிறது. இப்போது நீங்கள் அவற்றை குறைந்த விலையில் வாங்கலாம். OnePlus Nord சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது அமேசான் நிறுவனத்தில் கிடைக்கும் சலுகைகளை இங்கு காணலாம். 

OnePlus Nord CE 3 5G

இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் 12ஜிபி RAM வரையிலும், 256ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் வரையிலும் வசதிகள் உள்ளன. இது 50MP மூன்று பின்புற கேமரா அமைப்புடன் 16MP முன்பக்க செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. இந்த மொபைலில் 6.7 இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளே உள்ளது. இதன் புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) 120Hz ஆகும். இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OxygenOS 13 மூலம் இயங்குகிறது.

மேலும் படிக்க | இது டிஸ்பிளேவே இல்லாத ஸ்மார்ட்போன்... ஆடையிலேயே ஓட்டிக்கலாம்! - மிரட்டும் AI Pin சாதனம்

இந்த மொபைல் Qualcomm Snapdragon 782G பிராஸஸரைக் கொண்டுள்ளது. இந்த போன் 80W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியுடன் வருகிறது. இதன் விலை 26 ஆயிரத்து 999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அமேசானில் மூலம் வாங்கினால், ஐசிஐசிஐ வங்கி அட்டை மூலம் பரிவர்த்தனை மேற்கொண்டால் 2 ஆயிரம் ரூபாய் நேரடி தள்ளுபடியைப் பெறுவீர்கள். இவற்றில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.

OnePlus Nord N20 SE

இந்த ஸ்மார்ட்போன் Octacore பிராஸஸருடன் செயல்படுகிறது. இந்த மொபைலில் 128ஜிபி வரை இன்டெர்நல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP டூயல் ரியர் கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 8எம்பி முன்பக்க கேமரா உள்ளது. இந்த மொபைல் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரியுடன் வழங்கப்படுகிறது. மேலும், மொபைல் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. போனின் விலை 14 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும். அமேசானில் இதனை நீங்கள் வாங்கும் போது ஹெச்டிஎப்சி வங்கி அட்டை மூலம் பரிவர்த்தனை மேற்கொண்டால் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை தள்ளுபடி உண்டு.

OnePlus Nord CE 3 Lite 5G

5ஜி ஸ்மார்ட்போனான இதில் 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இது 108MP மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 16MP முன் கேமரா கொண்டுள்ளது. போனில் 6.72 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதன் புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) 120Hz ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 695 5G பிராஸஸர் உள்ளது. இது 33W SuperVOOC சார்ஜிங் வேகத்துடன் 5000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 19 ஆயிரத்து 999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. ஐசிஐசிஐ கார்டுகளில் பரிவர்த்தனை மேற்கொண்டால் 1500 ரூபாய் வரை தள்ளுபடி உண்டு.

அமேசான் நிறுவனத்தின் பண்டிகை கால தள்ளுபடி விற்பனையான கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் கடந்த நவ. 10ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் பல ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், ஸ்மார்ட் டிவி உள்ளிட்டவை மிக மிக மலிவு விலையில் கிடைத்தன. தற்போது அந்த தள்ளுபடிகள் முடிந்துவிட்டாலும் இதுபோன்ற சில சலுகைகளும் நடைமுறையில் உள்ளன. 

மேலும் படிக்க | நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் அனைத்தும் இலவசம் - ஜியோவின் அசத்தல் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News