இந்த பாஸ்வேர்ட்களை வைத்தால் ஆபத்து... உடனே மாற்றுங்கள் மக்களே!

Tech Tips: 2023ஆம் ஆண்டில் பல்வேறு தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்கள் குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 17, 2023, 02:22 PM IST
  • NordPass என்ற நிறுவனம் இதுசார்ந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • Password என்பது பலராலும் பயன்படுத்தும் கடவுச்சொல்லாக கடந்தாண்டு கூறப்பட்டது.
  • எளிமையாக பாஸ்வேர்ட் வைத்தால் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த பாஸ்வேர்ட்களை வைத்தால் ஆபத்து... உடனே மாற்றுங்கள் மக்களே! title=

Tech Tips: இந்த நவீன யுகத்தில் உங்கள் பிறந்த தேதி, திருமண நாள், மனைவி-பெற்றோர்-மகன்களின் பிறந்த தேதி உள்ளிட்டவை நியாபகம் வைத்துக்கொள்வது போன்ற அனைத்து பயன்பாடுக்களுக்குமான பாஸ்வேர்ட்டை நியாபகம் வைத்துக்கொள்வதும் அவசியமாகிவிட்டது. பேஸ்புக், X, இன்ஸ்டாகிராம், UPI Pin என பல செயலிகள் மற்றும் தளங்களுக்கு பாஸ்வேர்ட் என்பது மிக முக்கியம், எனவே அவற்றில் பாதுகாப்பான வகையில் பாஸ்வேர்டை அமைத்துக்கொள்வதுதான் உங்கள் கணக்கு வேறு யாராலும் முடங்காமல் இருப்பதற்கு அடிப்படை வழியாகும். 

மேலும் அனைத்து செயலிகளுக்கும், தளங்களுக்கும் ஒரே பாஸ்வேர்டை வைத்துக்கொள்வதுதான் பலபேரின் வழக்கமாகும். 2023ஆம் ஆண்டில், இந்தியர்கள் மற்றும் உலகம் முழுவதும் '123456' என்பது மிகவும் பொதுவான கடவுச்சொல் ஆக உள்ளது. கடவுச்சொல் மேலாண்மை தீர்வு நிறுவனமான NordPass-இன் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டில் மக்கள் தங்கள் ஸ்ட்ரீமிங் (ஓடிடி) கணக்குகளுக்கு பலவீனமான கடவுச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் அனைத்தும் இலவசம் - ஜியோவின் அசத்தல் அறிவிப்பு

ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிக்கும் வார்த்தைகள் மக்களின் கடவுச்சொற்களிலும் காணப்பட்டன. உலகளவில் இணையப் பயனர்கள் நாடு அல்லது நகரப் பெயர்களைத் தேடுகின்றனர். அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. நாட்டின் பட்டியலில் 'இந்தியா@123' என்பதை பலரும் பயன்படுத்துகின்றனர். 'admin' என்ற வார்த்தை, பெரும்பாலும், மக்கள் மாற்றமே செய்யாத கடவுச்சொற்களில் ஒன்றாகும். இது இந்தியா மற்றும் பல நாடுகளில் இந்த ஆண்டின் மிகவும் பொதுவான கடவுச்சொற்களில் ஒன்றாக இருப்பதாக NordPass வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு உலகளாவிய அளவில் 'Password' என்பது அதிகமானோரால் பேசப்படுகிறது. இந்தாண்டும் அது முன்னிலையில் உள்ளது. இந்தியாவில், 'Password','Pass@123', 'Password@123' மற்றும் இதே போன்ற மாறுபாடுகள் இந்த ஆண்டு மிகவும் பொதுவான கடவுச்சொற்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. எளிமையான பாஸ்வேர்ட்கள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது.  

இணைய பயனர்கள் வெவ்வேறு தளங்களில் பயன்படுத்தும் கடவுச்சொற்களைப் பற்றி அறிய, ஆராய்ச்சியாளர்கள் கடவுச்சொற்களின் 6.6 TB தரவுத்தளத்தை ஆய்வு செய்துள்ளனர். இது பல்வேறு மோசடி சம்பவங்களை தடுப்பதற்காகவே இந்த ஆய்வை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டது. இது மக்களின் இணைய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். சிறந்த பாதுகாப்பிற்கான அங்கீகாரத்தின் புதிய வடிவமாக பாஸ்கிகளை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர்.

"இந்த தொழில்நுட்பம் மோசமான கடவுச்சொற்களை அகற்ற உதவும், இதனால் பயனர்கள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இருப்பினும், ஒவ்வொரு புதுமையையும் போலவே, கடவுச்சொல் இல்லாத அங்கீகாரம் ஒரே இரவில் ஏற்றுக்கொள்ளப்படாது" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற எளிய பாஸ்வேர்ட்களை வைத்துக்கொண்டால் எளிமையாக உங்கள் கணக்கு ஹேக் ஆகிவிடும் என்பதை மறக்காதீர்கள் என்றும் எச்சரிக்கை வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க | கூகுள் அக்கவுண்டில் ஸ்டோரேஜ் இல்லையா... ஈஸியாக கோப்புகளை அழிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News