iPhone 13 Update: ஐபோன் 13 வெளியீட்டு தேதி அறிவிப்பு; கசிந்தது முக்கிய தகவல்

ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் எப்போது அறிமுகமாகும் என்கிற தேதி வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2021, 11:25 AM IST
  • ஐபோன் 13 சீரிஸ் எப்போது அறிமுகமாகும் என்கிற தேதி வெளியாகியுள்ளது
  • iPhone 13 Pro மேக்ஸ் 6.7-இன்ச் OLED 120Hz டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.
  • iPhone 13 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.
iPhone 13 Update: ஐபோன் 13 வெளியீட்டு தேதி அறிவிப்பு; கசிந்தது முக்கிய தகவல் title=

ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 14 ஆம் தேதி சிறப்பு நிகழ்வு நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் ஐபோன் 13 சீரிஸ், புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி காலை 10 மணி (PDT) அல்லது இரவு 10.30 (IST) தொடங்கும். மேலும் கலிபோர்னியா ஸ்ட்ரீமிங்" என்ற தலைப்பில் ஆப்பிள் அதன் செப்டம்பர் 14 ஆம் தேதி நிகழ்வை அறிவித்துள்ளது.

புதிய ஐபோன்களைப் பற்றி ஏற்கனவே பல வதந்திகள் வந்துக்கொண்டு இருக்கிறது. அதன்படி தற்போது அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 (IPhone 13 Mini) மினி மாடலில் 5.4 இன்ச் ஸ்கிரீன், ஐபோன் 13 (IPhone 13) மற்றும் ஐபோன் 13 ப்ரோ (IPhone 13 Pro) மாடல்களில் 6.1 இன்ச் OLED ஸ்கிரீன், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மேம்பட்ட 7பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ் 60 பேஸ்பேண்ட் சிப் புதிய ஐபோனில் வர வாய்ப்புள்ளது.

ALSO READ | Apple iPhone 13; வெளியீட்டு தேதி, விலை, அம்சங்கள்!

ஐபோன் 13 சீரிஸ் மேம்பட்ட பேட்டரிகளுடன் வரும் என்றும் வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது. மேலும் இந்த அனைத்து சாதனங்களும் சமீபத்திய ஆப்பிளின் A15 பயோனிக் சிப்செட் மற்றும் 1TB சேமிப்பு (for iPhone 13 Pro Max) மாடல்களால் இயக்கப்படும். மேலும், அனைத்து ஸ்மார்ட்போன்களும் அவற்றின் முந்தைய மாடலைப் போலவே 5 ஜி இயக்கப்படும். அதேபோல் ஐபோன் 13 சீரிஸ் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும். 

ஐபோன் 13 சீரிஸ் இன் கசிந்த விலை விவரம்
* ஐபோன் 13 ப்ரோ சாதனம் $ 999 (சுமார் ரூ. 73,300) க்கு விற்பனை ஆகலாம்
* ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் வேரியன்ட்டின் விலை $ 1,099 (சுமார் ரூ. 80,679).
* ஐபோன் 13 $ 799 (சுமார் ரூ. 58,600) விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* ஐபோன் 13 மினி ஸ்மார்ட்போனின் விலை $ 699 (சுமார் ரூ. 51,314) என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | 1TB Internal Storage கொண்ட Smartphone, விரைவில் இந்த ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News