iPhone 14 அறிமுகத்துக்கு முன் iPhone 13-ல் பம்பர் தள்ளுபடி: பிளிப்கார்ட் அதிரடி

iPhone 13 Discount: ஐபோன் பிரியர்களுக்கு சூப்பர் செய்தி. iPhone 14 அறிமுகத்துக்கு முன் பிளிப்கார்ட்டில் iPhone 13 அதிரடி தள்ளுபடியுடன் கிடைக்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2022, 10:45 AM IST
  • ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் தொடரான ​​ஐபோன் 14 தொடரை அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருகிறது.
  • ஐபோன் 13-ல் பிளிப்கார்டில் மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • இந்த டீல் பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.
iPhone 14 அறிமுகத்துக்கு முன் iPhone 13-ல் பம்பர் தள்ளுபடி: பிளிப்கார்ட் அதிரடி title=

ஐபோன் 14 வெளியீட்டிற்கு முன் ஐபோன் 13-ல் பம்பர் தள்ளுபடி: ஸ்மார்ட்போன் பிராண்டான ஆப்பிள், ஒவ்வொரு ஆண்டையும் போலவே, அதன் புதிய ஸ்மார்ட்போன் தொடரான ​​ஐபோன் 14 தொடரை அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த தொடர் அறிமுகம் செய்யப்படும். இதற்கிடையில், ஐபோன் 13 ஐ குறைந்த விலையில் வாங்குவதற்காகவே ஐபோன் 14 இன் வெளியீட்டிற்காக காத்திருக்கும் சிலரும் உள்ளனர். இந்த நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஐபோன் 13 இப்போதே தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஆகையால், இதற்காக, ஐபோன் 14 க்கு நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. ஐபோன் 13-ல் பம்பர் தள்ளுபடி கிடைக்கிறது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஐபோன் 13 இல் பம்பர் தள்ளுபடி

ஐபோன் 13 இன் 128 ஜிபி மாறுபாடு பற்றி இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இது ரூ.79,900 விலையில் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் பிளிப்கார்டில் வாங்கினால், 7% தள்ளுபடிக்குப் பிறகு 73,999 ரூபாய்க்கு கிடைக்கும். இது மட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது பிளிக்பார்ட் ஆக்சிஸ் பாங்க் கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தினால், 5% அதாவது ரூ.3,700 கேஷ்பேக் பெறலாம். அதன் பிறகு இந்த போனின் விலை ரூ.70,299 ஆக குறையும். 

மேலும் படிக்க | Whatsapp புதிய அம்சம்: இனி இதை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது, பாதுகாப்பு பலமானது 

எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் விலை மேலும் குறையும் 

பிளிப்கார்டில் உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக ஐபோன் 13 ஐ வாங்கினால், 19 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த போனின் விலை மேலும் ரூ.70,299ல் இருந்து ரூ.51,299 ஆகக் குறைக்கப்படும். அதாவது ஒட்டுமொத்தமாக இந்த டீலில் 29 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தள்ளுபடி பெறலாம்.

ஐபோன் 13 இன் அம்சங்கள்

முன்பே குறிப்பிட்டது போல, இந்த டீல் ஐபோன் 13 இன் 128ஜிபி சேமிப்பக மாறுபாட்டுக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் A15 பயோனிக் சிப்பில் வேலை செய்கிறது. 5ஜி சேவைகளுடன் கூடிய இந்த ஐபோன் 13 ஆனது 6.1-இஞ்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கேமராவைப் பற்றி பேசுகையில், அதன் பின்புற கேமரா அமைப்பில் கொடுக்கப்பட்ட இரண்டு சென்சார்களும் 12எம்பி மற்றும் முன் கேமராவும் 12எம்பி கொண்டுள்ளன. இரட்டை சிம் சேவைகள் கொண்ட இந்த போனில், உங்களுக்கு ஒரு வருட பிராண்ட் வாரண்டியும் வழங்கப்படும்.

மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை உலுக்கப்போகும் ஐபோன் 14; வெளியீட்டு தேதி இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News