மாருதி சுஸுகி நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் சந்தையில் மிகப்பெரிய புயலைக் கிளப்ப தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு பல புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஒன்று மாருதி சுசுகியின் 2022 XL6 ஃபேஸ்லிஃப்ட் கார். இது விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. XL6 எஸ்யூவியின் படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி மார்க்கெட்டில் புதிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க | ஏர்டெல்லின் அட்டகாசமான ஆஃபர்! ரூ.209க்கு ரீச்சார்ஜ் செய்து அமேசான் பிரைம் பெறுங்கள்
XL6-ன் முன் கிரில் அமைப்பு
மாருதி சுஸுகி நிறுவனத்தின் 15-இன்ச் கருப்பு நிற அலாய் வீல்கள் தற்போதைய XL6 காரில் உள்ளது. ஆனால், அதன் அளவு சிறியதாகத் தெரிவதாக வாடிக்கையாளர்கள் மாருதி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளனர். எனவே புதிய மாடல் சில பெரிய அலாய் வீல்களுடன் வரலாம். இது தவிர, மாற்றப்பட்ட முன்பக்க கிரில் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் XL6 வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்இடி ஹெட்லேம்ப்கள், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒன் டச் ரிக்லைன் ஃபங்ஷனுடன் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
டெக்னாலஜி சிறப்பம்சங்கள்
தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, பயணக் கட்டுப்பாடு, ஆட்டோ ஃபோல்டிங் ORVMகள் மற்றும் ஸ்டீயரிங் கட்டுப்பாடுகள் போன்ற அம்சங்கள் புதிய மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இருக்கும் மாடலைப்போலவே 1.5 லிட்டர் பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரிட் எஞ்சின் XL6 2022-ல் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இந்த எஞ்சின் 103 பிஎச்பி பவர் மற்றும் 138 என்எம் பீக் டார்க்கை உருவாக்குகிறது. மேலும், இந்த எஞ்சினில் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் அறிமுகப்படுத்தபட்டால் மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Kia Karens MPV உடன் மாடல் கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும். விலையை பொறுத்தவரை மிக அதிகமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | Flipkart Big Saving Days: ரூ. 29,999 ஸ்மார்ட் டிவி-ஐ வெறும் ரூ. 7,749-க்கு வாங்கலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR