அமேசான் தரும் பம்பர் தள்ளுபடி.. ரூ.1500 இருந்தாலே போதும்.. குறைந்த விலையில் 'நச்' லேப்டாப்கள்

Cheap Laptops In Amazon: அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் 1500 ரூபாய்க்கும் கீழ் மாதத் தவணையில் வாங்கும் வகையிலான மூன்று அசத்தலான லேப்டாப்களை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 3, 2023, 11:36 AM IST
  • விரைவில் இந்த விற்பனை தொடங்க உள்ளது.
  • எஸ்பிஐ வங்கி கார்டுகள் தனி தள்ளுபடி உள்ளது.
  • இந்த லேப்டாப்களை குறைந்த மாதத் தவணைகளில் வாங்கலாம்.
அமேசான் தரும் பம்பர் தள்ளுபடி.. ரூ.1500 இருந்தாலே போதும்.. குறைந்த விலையில் 'நச்' லேப்டாப்கள் title=

Cheap Laptops In Amazon 2023 Sale: இந்தாண்டுக்கான அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை விரைவில் தொடங்க உள்ளது. இந்த மெகா விற்பனையில் பம்பர் தள்ளுபடியுடன் பல பொருள்களை நீங்கள் வாங்கலாம். அமேசான் நிறுவனமும் பல்வேறு பொருள்கள் மீதான அதன் விற்பனை விலையை நேரலையில் அறிவிக்கத் தொடங்கி இருக்கிறது. 

இருப்பினும், விற்பனைக்கு முன்பே, அமேசான் இணையதளம் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் டெபிட்/கிரெடிட் கார்டுகளில் பல சலுகைகளை வழங்குகிறது. அதனை பயன்படுத்தி நீங்கள் மலிவாக மடிக்கணினி வாங்க வாய்ப்பு உள்ளது. மடிக்கணினிகளை மாதாந்திர தவணைகளில் 1500 ரூபாய் வரை வாங்கலாம். மேலும், அவற்றிலும் தள்ளுபடிகள் உள்ளன. 1500 ரூபாய்க்கு குறைவான விலையில் வாங்க்க கூடிய அத்தகைய மடிக்கணினிகளை பற்றி இன்று இதில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | மொபைல் பழசாகிடுச்சா... அக்டோபரில் அம்சமா அறிமுகமாகும் 5 ஸ்மார்ட்போன்கள் - இதை பாருங்க!

JioBook 11 (2023)

JioBook 11 லேப்டாப் Mediatek 8788 Octa-core பிராஸஸர் (Processor) உடன் வருகிறது. இதில் 64 GB இன்டெர்நல் மெமரி ஸ்டோரேஜ் உள்ளது. மடிக்கணினியில் 4 GB RAM பொருத்தப்பட்டுள்ளது. சேமிப்பகத்தை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தலாம். ஆன்டி க்ளேர் HD டிஸ்ப்ளே மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்கள் லேப்டாப்பில் கிடைக்கும். இதன் விலை ரூ.16 ஆயிரத்து 499 ஆகும். அமேசானில் இருந்து 800 ரூபாயை மாதத் தவணையாக செலுத்தி இந்த லேப்டாப்பை வாங்கலாம். SBI கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி உண்டு.

HP Chromebook x360

இந்த HP லேப்டாப் 14 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. இது 2 இன் 1 லேப்டாப். மடிக்கணினியில் டெக்ஸ்கிரீன் போன்ற பல சிறந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 4 GB RAM உடன் 64 GB இன்டெர்நல் மெமரி உள்ளது. மடிக்கணினியில் Intel Celeron N4120 பிராஸஸர் (Processor) பொருத்தப்பட்டுள்ளது. அதன் காட்சியின் பிக்சல் Resolution 1366 x 768 மற்றும் உச்ச பிரகாசம் 220 நைட்ஸ் ஆகும். அமேசானில் இந்த லேப்டாப் 16,990 ரூபாய்க்கு கிடைக்கிறது. நீங்கள் 824 ரூபாய்க்கு மாதத் தவணையில் வாங்கலாம். SBI கார்டுகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி உண்டு.

Acer One 14

இந்த லேப்டாப்பில் Windows 11 மற்றும் AMD Ryzen 3 3250U பிராஸஸர் போன்ற சிறப்பான அம்சங்கள் உள்ளன. மடிக்கணினியில் 14 இன்ச் எச்டி டிஸ்ப்ளே உள்ளது. இதன் பிக்சல் Resolution 1366 X 768  மற்றும் ஸ்கிரீன் Ratio 16:9 ஆகும். மடிக்கணினி மெல்லியதாகவும் இலகுவாகவும் உள்ளது. இந்த லேப்டாப் 8 GB RAM உடன் 512 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.24,990 ஆகும். அமேசானில் இருந்து 1,212 ரூபாய்க்கு மாதத் தவணையில் வாங்கலாம். இதிலும் எஸ்பிஐ கார்டுகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி உண்டு.

மேலும் படிக்க | Google Pixel 8: இந்த மொபைலுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு... முன்பதிவு தேதி அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News