குறைந்த விலையில் கிடைக்கிறது Redmi போன், முந்துங்கள்

விற்பனையில், வாடிக்கையாளர்களுக்கு போன்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் பேண்ட்கள் ஆகியவற்றில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 15, 2022, 04:22 PM IST
  • இன்று விற்பனையின் கடைசி நாள்.
  • ரெட்மி நோட் 10டி 5ஜி மிகவும் மலிவாக வாங்க முடியும்.
குறைந்த விலையில் கிடைக்கிறது Redmi போன், முந்துங்கள் title=

இன்று (பிப்ரவரி 15) Mi Sale இன் கடைசி நாள் ஆகும். இந்த விற்பனையில், வாடிக்கையாளர்களுக்கு போன்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் பேண்டுகள் ஆகியவற்றில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனையில் சிட்டி வங்கி கார்டின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 5,000 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் கோடக் மஹிந்திரா வங்கியில் இருந்து ஷாப்பிங் செய்தால் 10% தள்ளுபடி கிடைக்கும். 

ரெட்மி நோட் 10டி 5ஜி போனில் 6.5 இன்ச் 1080பி எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது, இது 90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. ரெட்மி நோட் 10டி 5ஜி ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப் மற்றும் 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. மெட்டாலிக் ப்ளூ, மிண்ட் கிரீன், குரோமியம் ஒயிட் மற்றும் கிராஃபைட் பிளாக் ஆகிய வண்ண வகைகளில் வாடிக்கையாளர்கள் ரெட்மி நோட் 10டி 5ஜி போனை வாங்கலாம். இந்த ஃபோன் எம்ஐயுஐ 12 அடிப்படையில் ஆண்ட்ராய்டு 11ல் வேலை செய்கிறது.

மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள்

டிரிபிள் கேமரா கிடைக்கும்
கேமராவை பற்றி பேசுகையில் இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது, இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. இது தவிர, செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஆற்றலுக்கு, இந்த ஃபோனில் 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இது 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

மேலும் படிக்க | தள்ளுபடி விலையில் ஐபோன் 12! இன்றே முந்துங்கள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News