ஜீயோவின் மிக மலிவான JioBook Laptop: முக்கிய அம்சங்கள்... வாங்கும் விவரங்கள் இதோ

JioBook Laptop: ஜியோபுக் லேப்டாப் பற்றிய அனைத்து சிறப்பம்சங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 1, 2023, 11:53 AM IST
  • JioBook Laptop JioOS இயக்க முறைமையில் (ஆபரேடிங் சிஸ்டம்) வேலை செய்கிறது.
  • இது 4G இணைப்பு மற்றும் டூயல்-பேண்ட் Wi-Fi ஐ ஆதரிக்கிறது.
  • இதன் மூலம் பயனர் எங்கு வெண்டுமானாலும் எந்த நேரத்திலும் ஆன்லைனில் இருக்க முடியும்.
ஜீயோவின் மிக மலிவான JioBook Laptop: முக்கிய அம்சங்கள்... வாங்கும் விவரங்கள் இதோ title=

JioBook Laptop: ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் அதன் மிக மலிவு விலை ஜியோபுக் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை வெறும் ரூ.16,499 ஆகும். இது ஒரு அடிப்படை மடிக்கணினி என்பது குறிப்பிடத்தக்கது. விலை குறைவாக இருந்தாலும், இந்த ஜியோ லேப்டாப் சக்திவாய்ந்த அம்சங்களுடன் வருகிறது. இந்த லேப்டாப் கொண்டு பயனர்கள் Digiboxx இல் 100GB இலவச கிளவுட் ஸ்டோரேஜ் ஸ்பேசையும் பெற முடியும். மேலும் இது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். ஜியோபுக் லேப்டாப் பற்றிய அனைத்து சிறப்பம்சங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

JioBook Laptop அறிமுகம் ஆனது

ஜியோவின் இந்த லேப்டாப்பில் ஒரு சக்திவாய்ந்த ஆக்டா-கோர் செயலி மற்றும் 4GB LPDDR4 ரேம் உள்ளது. இது மென்மையான மல்டிடாஸ்கிங் மற்றும் திறமையான செயல்திறனை வழங்குகிறது. இது 64ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இதனை எஸ்டி கார்டு மூலம் 256ஜிபி வரை விரிவாக்க முடியும். ஜியோபுக்கின் முக்கிய அம்சங்களில் ஒன்று இன்ஃபினிட்டி கீபோர்டு மற்றும் பெரிய மல்டி-ஜெச்சர் டிராக்பேட் ஆகும். இந்த மடிக்கணினி உள்ளமைக்கப்பட்ட USB மற்றும் HDMI போர்ட்களுடன் வருகிறது. இது பயனர்களை வெளிப்புற சாதனங்கள் மற்றும் பிற சாதனங்களுடன் லேப்டாப்பை இணைக்க அனுமதிக்கிறது.

JioBook Laptop: சில முக்கிய அம்சங்கள் 

- இது JioOS இயக்க முறைமையில் (ஆபரேடிங் சிஸ்டம்) வேலை செய்கிறது. இது ஒரு பயனருக்கு ஏற்ற (யூசர் ஃப்ரெண்ட்லி) மற்றும் உகந்த இடைமுகம் (இண்டர்ஃபேஸ்) ஆகும்.

- இது 4G இணைப்பு மற்றும் டூயல்-பேண்ட் Wi-Fi ஐ ஆதரிக்கிறது. இதன் மூலம் பயனர் எங்கு வெண்டுமானாலும் எந்த நேரத்திலும் ஆன்லைனில் இருக்க முடியும். 

- இதன் வடிவமைப்பு மிகவும் மெலிதான (அல்ட்ரா-ஸ்லிம்) மற்றும் இலகுரகமாக உள்ளது. இந்த லேப்டாப் சுமார் 990 கிராம் எடை கொண்டது. இதை எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். 

- இது ஒரு சிறிய 11.6-இன்ச் ஆன்டி-க்ளேர் HD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது வெளிப்புற வெளிச்சத்தில் பார்ப்பதை எளிதாக்குகிறது.

JioBook Laptop: குறிப்பிடத்தக்க அம்சங்கள்

- ஜியோபுக் 4G LTE மற்றும் டூயல் பேண்ட் WiFi உடன் இணைக்க முடியும்.
- திரை நீட்டிப்பு
- வயர்லெஸ் பிரிண்டிங்
- ஒருங்கிணைந்த சாட்போட்
- ஜியோ டிவி பயன்பாட்டில் கல்வி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்
- ஜியோ கேம்களை விளையாடுங்கள்
- Geobian மூலம் நீங்கள் குறியீட்டைப் படிக்க முடியும். மாணவர்கள் சி மற்றும் சிசி பிளஸ் பிளஸ், ஜாவா, பைதான் மற்றும் பெர்ல் படிக்க முடியும்.

மேலும் படிக்க | 4G JioBook: ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ புக் வாங்குவது எப்படி?

JioBook Laptop: புதிய அம்சங்கள்

- ஸ்டைலான வடிவமைப்பு
- மேட் ஃபினிஷ்
- அல்ட்ரா ஸ்லிம்
- எடை 990 கிராம் மட்டுமே
- 2 GHz ஆக்டா ப்ராசசர்
- 4 ஜிபி LPDDR4 ரேம்
- 64ஜிபி ஸ்டோரேஜ், எஸ்டி கார்டு மூலம் 256ஜிபி வரை விரிவாக்கக்கூடியது
- 2 USB போர்ட்கள் 
- HDMI -க்கான போர்ட்
- 11.6-இன்ச் (29.46 செமீ) ஆண்டி-க்ளேர் டிஸ்ப்ளே

ஜியோபுக் லேப்டாப்: எப்போது கிடைக்கும்?

புதிய ஜியோபுக் லேப்டாப் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்கும். மேலும் ரிலையன்ஸ் டிஜிட்டலின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் பயனர்கள் இதை வாங்கலாம். இது தவிர, ஜியோவின் இந்த் அமலிவு விலை லேப்டாப் அமேசான் மூலமாகவும் விற்பனை செய்யப்படும்.

மேலும் படிக்க | ஜியோ vs ஏர்டெல்: பெஸ்ட் 5ஜி பிளான்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News