அறிமுகம் ஆனது Realme 9i: அசத்தல் அம்சங்கள், மலிவு விலை, முழு விவரம் இதோ

Realme இந்தியாவில் Realme 9i ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சில நாட்களுக்கு முன்பு வியட்நாமில் அறிமுகம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2022, 02:54 PM IST
  • Realme 9i இன் முதல் விற்பனை ஜனவரி 25 அன்று Flipkart, realme.com மற்றும் சில்லறை கடைகளில் நடைபெறும்.
  • இந்த போன் நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் வருகிறது.
  • இதன் ஆரம்ப விற்பனை ஜனவரி 22ம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும்.
அறிமுகம் ஆனது Realme 9i: அசத்தல் அம்சங்கள், மலிவு விலை, முழு விவரம் இதோ title=

Realme 9i Smartphone: Realme இந்தியாவில் Realme 9i ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சில நாட்களுக்கு முன்பு வியட்நாமில் அறிமுகம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வமாக வந்துள்ள முதல் Realme 9-சீரிஸ் போன் இதுவாகும். 

ரியல்மியின் (Realme) Realme 9i-ல் செல்ஃபி ஸ்னாப்பருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் டிரிபிள் கேமரா சென்சாரை வைக்க ஒரு செவ்வக மாட்யூல் ஆகியவை உள்ளன. முக்கிய அம்சங்களில் 6.6 இன்ச் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், பின்புறத்தில் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவை அடங்கும். இந்தியாவில் Realme 9i விலை, விற்பனை தேதி மற்றும் விவரக்குறிப்புகள் ஆகியவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்தியாவில் Realme 9i-இன் விலை

இந்தியாவில் Realme 9i இன் விலை 4ஜிபி/64ஜிபி மாடலுக்கு ரூ.13,999 மற்றும் 6ஜிபி/128ஜிபி வகைக்கு ரூ.15,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் நீலம் மற்றும் கருப்பு வண்ணங்களில் வருகிறது. Flipkart மற்றும் Realme வலைத்தளங்கள் மூலம் இது விற்பனைக்கு வரும். இந்தியாவில் Realme 9i இன் முதல் விற்பனை ஜனவரி 25 அன்று Flipkart, realme.com மற்றும் சில்லறை கடைகளில் நடைபெறும். இதன் ஆரம்ப விற்பனை ஜனவரி 22ம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும்.

Realme 9i: விவரக்குறிப்புகள்

Realme 9i ஆனது 90Hz புதுப்பிப்பு வீதம், 180Hz தொடு மாதிரி வீதம், 90.8 சதவீத ஸ்க்ரீன்-டு-பாடி விகிதம், 20:1:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, டிராகன் டிரெயில் ப்ரோ லேயர் மற்றும் செல்ஃபிக்களுக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் 6.6-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஸ்னாப்பர் Realme 9i பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. இதில் PDAF மற்றும் f/1.8 துளையுடன் கூடிய 50MP பிரதான Samsung S5KJN1SQ03 சென்சார், 2MP டெப்த் சென்சார் மற்றும் f/2.4 துளை கொண்ட 2MP மூன்றாவது லென்ஸ் ஆகியவை உள்ளன. 

ALSO READ | Moto Tab G70 இன்று இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள் இதோ

Realme 9i: பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் (Smartphone) 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான Realme UI 2.0 கஸ்டம் ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸில் இயங்குகிறது. 16MP Sony IMX471 ஸ்னாப்பர் மற்றும் செல்ஃபிகள் மற்றும் வீடியோ சேட்க்களுக்கு முன்புறத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

Realme 9i:பிற அம்சங்கள்

சார்ஜ் செய்வதற்கான இணைப்பு ஆப்ஷன்களாக 4G, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளன. இது Adreno 610 GPU உடன் இணைக்கப்பட்ட Snapdragon 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 6GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB வரை UFS 2.1 ஸ்டோரேஜ் உள்ளது. இதை 1TB வரை மேலும் விரிவாக்கிக்கொள்ளலாம். சாதனத்தின் அளவுகள் 164.4X75.7X8.4mm மற்றும் எடை 190 கிராம் ஆகும்.

ALSO READ | Flipkart Offer; வெறும் ரூ.300க்குள் OPPO 5G ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News