ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்து தமிழில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்! எப்படி?

Download Birth Certificate Tamil: ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்தபடியே பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக பைசா செலவிட தேவையில்லை. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 16, 2024, 07:31 PM IST
  • தமிழில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்
  • வீட்டில் இருந்தபடியே டவுன்லோடு செய்யலாம்
  • இனி பிறப்புச் சான்றிதழ் பெறுவது ஈஸி
ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்து தமிழில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்! எப்படி? title=

பிறப்புச் சான்றிதழ்

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பை குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். தமிழக அரசின் விதிமுறைகளின் படி, ஒவ்வொரு பிறப்பும் 14 நாள்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு இறப்பும் 7 நாள்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். மக்கள் அவரவர் வாழும் நகர பஞ்சாயத்து பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்ய முடியும். அவ்வாறு பதிவு செய்து வாங்கிய சான்றிதழ்கள் நீங்கள் ஒருவேளை தொலைத்து விட்டீர்கள் என்றால் கவலைப்பட வேண்டாம். 

மேலும் படிக்க | EPFO கணக்கில் யுஏஎன் எண் இல்லாமல் பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி?

கட்டணமில்லா சான்றிதழ்

இப்போது மத்திய அரசின் மின்னாளுமை திட்டத்தில், பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ்கள் பெறுவது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிறப்பு, இறப்பு அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பொதுமக்கள் நேரடியாக பதிவேற்றம் செய்து தங்களுக்கான பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்நிலையில், பிறப்பு சான்றிதழ் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உங்களுடைய குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை ஒரு பைசா செலவில்லாமல் நீங்களே எளிதாக ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிறப்புச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி? 

பிறப்புச் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதில் இரண்டு வகையான வழிமுறைகள் உள்ளன. அதன்படி, சென்னையில் உள்ளவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்ற இணையதள இணைப்பின் வழியாகவும், பிற பகுதிகளில் உள்ளவர்கள் https://www.etownpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற இணையதள இணைப்பின் வழியாகவும் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சென்னை தவிர மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்ய.. பேரூராட்சிகள் இயக்ககத்தின் htpps://www.etwnpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற இணையதள இணைப்பு பக்கத்திற்கு சென்று திரையில் தோன்றும் பிறப்பு சான்றிதழ் தேடுதல்(Search) என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

தமிழில் பிறப்புச் சான்றிதழ்

பின்னர், பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பாலினம், பிறந்த தேதி முதலிய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அடுத்து சான்றிதழ் தமிழில் வேண்டும் என்றால் சான்றிதழ் வகை என்பதில் தமிழை கிளிக் செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் சான்றிதழ் வகையில் ஆங்கிலம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.  பின்னர், அனைத்து விவரங்களையும் சரியாகப் பதிவு செய்த பின்னர் Generate என்பதை கிளிக் செய்தால் பிறப்பு சான்றிதழ் விவரங்கள் திரையில் தோன்றும். அடுத்ததாக பிரிண்ட்(PRINT) என்பதை கிளிக் செய்து பிறப்பு சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | நெட்டிசன்களின் குறுக்கு வழிக்கு ஆப்பு வைத்த யூடியூப்! இனி இந்த வேலையெல்லாம் ஆகாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News