ஜியோ ஃபைபர் இலவச சோதனை: பிராட்பேண்ட் என்று வரும்போது, ஜியோ ஃபைபர் பெயர் தான் முதலில் வரும். இதற்கு முக்கிய காரணம் எளிதான அணுகல் மற்றும் அதிவேக இணைய இணைப்பு ஆகும். ஜியோ குறைந்த விலையில் அதிக நன்மைகளுடன் திட்டங்களைக் கொண்டுவருகிறது. ஆனால் நீங்கள் ஜியோ ஃபைபரை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்... இணையம் மற்றும் அழைப்பை இலவசமாக அனுபவிக்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோம்...
ஜியோ ஃபைபர் இலவச சோதனைச் சலுகை
ஜியோ பயனர்களுக்கு ஒரு மாத இலவச சோதனை வழங்குகிறது. அதாவது 30 நாட்களுக்கு Jiofiberஐ இலவசமாகப் பயன்படுத்தலாம். 1 மாத சோதனை முடிந்ததும், திட்டத்தைத் தேர்ந்தெடுத்து சேவையைத் தொடரலாம் அல்லது முழு வைஃபை அமைப்பையும் திரும்பப் பெறலாம். ஆனால் இதில் நீங்கள் இன்ஸ்டலேஷன் கட்டணத்தை செலுத்த வேண்டும், அதன் பிறகு நீங்கள் 1 மாதத்திற்கு இலவச வரம்பற்ற இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இதற்காக நீங்கள் தனி கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
மேலும் படிக்க | Cyber: கூகுளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க வழி! ரகசியத்தைக் காப்பாற்றும் டிப்ஸ்
1 மாதம் இலவச இணையம்
பயனர்களை அதிகரிக்கவும் நம்பிக்கையை வளர்க்கவும் நிறுவனம் இந்த இலவச சோதனையை வழங்குகிறது. பயனர்கள் ஜியோஃபைபரை ஒரு மாதத்திற்கு பணம் செலுத்தாமல் அனுபவிக்க முடியும். இதில் இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று, திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு மாதம் இலவசமாகப் பெறுவீர்கள், மற்றொன்று 1 மாத சோதனையை எடுத்துக் கொள்ளுங்கள். நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, இந்த நேரத்தில் 150 Mbps வரம்பற்ற இணைய வசதி Symmetric வேகத்துடன் வழங்கப்படுகிறது.
ஜியோ ஃபைபரை நிறுவும் முன் ரூ.1500 இன்டர்நெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீங்களும் OTT பேக்கைப் பெற விரும்பினால், இணையம் + OTT இலவச சோதனையுடன் ரூ.2500 செலுத்த வேண்டும். இரண்டிலும் இலவச சோதனை முடிந்ததும், செட்டப் பாக்ஸை ஒப்படைத்தால், முழுப் பணமும் திரும்பக் கிடைக்கும்.
மேலும் படிக்க | வெறும் ரூ. 20,000-க்கு ஐபோன் 11: பிளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ