Ertiga Vs Carens Vs Triber:சிறந்த மைலேஜ் மற்றும் விலையில் பெஸ்ட் கார் எது?

புதிய மாருதி சுஸுகி எர்டிகா, கியா கேரன்ஸ் மற்றும் ரெனால்ட் ட்ரைபர்  கார்களை ஒப்பீடு செய்வதன் மூலம் உங்களுக்கு பெஸ்டாக இருக்கும் கார்களை எளிதாக தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 17, 2022, 11:57 AM IST
  • பட்ஜெட் விலையில் கிடைக்கும் கார்கள்
  • இந்த ஆண்டில் எந்தக் காரை வாங்கலாம்?
  • தெளிவான ஐடியா உடன் கார் வாங்க செல்லுங்கள்
Ertiga Vs Carens Vs Triber:சிறந்த மைலேஜ் மற்றும் விலையில் பெஸ்ட் கார் எது? title=

Maruti Suzuki அண்மையில் புதிய 7-சீட்டர் MPV எர்டிகாவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் பிரபலமாக இருப்பது இந்த காருக்கு உள்ள பிளஸ். இதே ரேஞ்சில் உள்ள மற்ற சில கார்கள் என்றால்,  Kia Carnes மற்றும் Renault Triber ஆகியவை உள்ளன. இந்த மூன்று கார்களின் செயல்திறன், விலை, பாதுகாப்பு மற்றும் சிறப்பம்சங்கள் தவிர, மைலேஜ் அடிப்படையிலும் ஒப்பிட்டு பார்க்கலாம். 

என்ஜின் அமைப்பு 

புதிய மாருதி சுஸுகி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் 1.5 லிட்டர் K15C இன்ஜின் மூலம் 101 குதிரைத்திறன் மற்றும் 136 Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. கியா நிறுவனம் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் மாடல்களை கொடுக்கிறது. ரெனால்ட் ட்ரைபர் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் பீக் டார்க் திறனையும் கொடுக்கும். 

மேலும் படிக்க | மொபைல் பேட்டரிகள் வெடிப்பதற்கான காரணம் இதுதான் - இந்த தவறை செய்யாதீங்க

பாதுகாப்பில் பெஸ்ட்

பாதுகாப்பை பொறுத்தவரை 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ள கியா கார்ன்ஸ் முன்னணியில் உள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா 4 ஏர்பேக்குகளைக் கொண்டுள்ளது. ரெனால்ட் ட்ரைபரில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. கியா கார்ன்ஸ் காருக்கு 4 ஸ்டார் பாதுகாப்பு குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பழைய எர்டிகா 3 ஸ்டார்களையும், ரெனால்ட் டிரைபர் 4 ஸ்டார்களையும் பெற்றுள்ளன. புதிய எர்டிகா அவற்றில் இருந்து மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விலையில் எது சிறந்தது?

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய எர்டிகாவை ரூ.8.35 லட்சம் தொடக்க விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கியா கார்களின் ஆரம்ப விலை தற்போது ரூ.9.39 லட்சமாக உயர்ந்துள்ளது. 5.69 லட்சம் ஆரம்ப விலையில், அதாவது மிகவும் மலிவு விலையில் ரெனால்ட் ட்ரைபர் விற்பனை செய்யப்படுகிறது. அந்த கார்களில் இருக்கும் அனைத்து அம்சங்களும் டிரைபரிலும் இருக்கின்றன. 

மைலேஜ்ஜில் பெஸ்ட் எது?

கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் மைலேஜூக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். புதிய மாருதி சுஸுகி எர்டிகா 1 லிட்டர் பெட்ரோலில் 20.51 கிமீ வரை பயணம் செய்யலாம். அதன் சிஎன்ஜி வகை 26.50 கிமீ மைலேஜ் தருகிறது. கியா கேரன்ஸின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 15.7 முதல் 17 கிமீ வரை கொடுக்கிறது. டீசல் மாடல் லிட்டருக்கு 21.30 கிமீ வரை பயணிக்கலாம். ரெனால்ட் ட்ரைபர் 20 கிமீ வரை மைலேஜ் தரும்.

டெக் அம்சங்கள் என்ன? 

டெக் அம்சங்களிலும் கியா கேரன்ஸ் முன்னணியில் உள்ளது. அளவில் எர்டிகாவை விட பெரியது. எர்டிகாவில் 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இவை தவிர ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஏபிஎஸ் வித் ஈபிடி மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன. ரெனால்ட் ட்ரைபர் அடிப்படை அம்சங்களுடன் வருகிறது. டெக்கில் கியா மற்றும் எர்டிகா பெஸ்ட். பட்ஜெட் அடிப்படையில் ரெனால்ட் பெஸ்ட்.

மேலும் படிக்க | பிரெஸ்ஸாவுக்கு கிடைத்த 5 ஸ்டார் ரேட்டிங் - மகிழ்ச்சியில் மாருதி நிறுவனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News