அமேசான் நிறுவனம் டாய்லெட் கவர், ஃபுட் மேட் ஆகியவற்றில் இந்து கடவுளில் படங்களை அச்சிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆன்-லைன் வர்த்தக இணையதளத்தில் ஒன்றானது அமேசான். இந்த நிறுவனம் தன்னுடைய இணையதளத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பு செய்யும் வகையிலான பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளது.
இந்து கடவுள்கள் புகைப்படம் டாய்லெட் கவரிலும், காலில் போட்டு மிதிக்கும் மேட்களிலும் இடம்பெற்றுள்ளது. இவ்வகையான பொருட்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. இணையதளத்தின் அமெரிக்க பிரிவில் இதுபோன்ற பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் செருப்பில் தேச தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படத்தை பொறித்தும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இதையடுத்து இந்து கடவுள்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது என்று நெட்டீசன்கள் கொதிப்படைந்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும், அவர்களுடைய அமேசான் ஆப்பை அன்இன்ஸ்டால் செய்து, அதனை ஸ்கீரின்ஸாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர். இருப்பினும், இந்த இணைய எதிர்ப்பு இதுவரையில் அமேசான் நிறுவனம் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது இந்த செயலை கண்டித்து நொய்டா போலீசார் அமேசான் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு எதிராக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது.