அட்டகாச அம்சங்கள், நவீன தொழில்நுட்பத்துடன் Tecno Spark 7 Pro அறிமுகம்

ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ தனது புதிய ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோவை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று வகைகளைக் கொண்ட இந்த தொலைபேசி பல சிறந்த அம்சங்கள், பிரீமியம் வடிவமைப்பு மற்றும் வலுவான பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 29, 2021, 06:11 PM IST
  • டெக்னோ தனது புதிய ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோவை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. .
  • டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ, பல முன்னணி பிராண்டுகளுடன் ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டியிடும்.
  • இந்த தொலைபேசியில் வைஃபை, 4 ஜி, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அட்டகாச அம்சங்கள், நவீன தொழில்நுட்பத்துடன் Tecno Spark 7 Pro அறிமுகம் title=

ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ தனது புதிய ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோவை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று வகைகளைக் கொண்ட இந்த தொலைபேசி பல சிறந்த அம்சங்கள், பிரீமியம் வடிவமைப்பு மற்றும் வலுவான பேட்டரி ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இவை அனைத்தும் இதை ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனாக்குகின்றன (Smartphone). ஸ்மார்ட்போன் சந்தையை கலக்க களமிறங்கும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மூன்று வகைகளில் கிடைக்கும் 

Tecno Spark 7 Pro-வில் மூன்று வகைகள் வருகின்றன. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை இந்த மூன்று வகைகள் ஆகும். இந்த தொலைபேசி ஆல்ப்ஸ் ப்ளூ, மேக்னடிக் பிளாக், நியான் ட்ரீம் மற்றும் ஸ்ப்ரூஸ் கிரீன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதை கையில் பெறும் நேரத்திற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். 
 
ALSO READ: Samsung Galaxy M42 5G இந்தியாவில் அறிமுகம்: லீக் ஆன விலை, பிற விவரங்கள் இதோ

விவரக்குறிப்பு

Tecno Spark 7 Pro, 6.6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 720x1,600 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. பவரைப் பொறுத்தவரை, இந்த தொலைபேசியில் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. செயல்திறனைப் பொறுத்தவரை, இது மீடியாடெக் ஹீலியோ ஜி 80 பிராசசரைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி Android 11 அடிப்படையிலான HiOS 7.5 இல் இயங்குகிறது.

கேமரா

புகைப்படம் மற்றும் வீடியோவைப் பொறுத்தவரை, இந்த தொலைபேசியில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இது 48MP முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது. மற்ற இரண்டு லென்ஸ்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதில் முன் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இணைப்பிற்காக, இந்த தொலைபேசியில் வைஃபை, 4 ஜி, புளூடூத் (Bluetooth), ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக, அதன் பின் பேனலில் கைரேகை ஸ்கேனர் உள்ளது.

ALSO READ: உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்

எந்த தொலைபேசிகளுடன் போட்டி? 

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ, சியோமி, ரியல்மீ, ஒப்போ, விவோ, சாம்சங், மோட்டோ, ரெட்மி மற்றும் நோக்கியா போன்ற பிராண்டுகளுடன் போட்டியிடும். இந்தியாவில் இந்த தொலைபேசி அறிமுகமாகும்போது, கண்டிப்பாக ஸ்மார்ட்போன் பிரியர்கள் இதன் விசேஷ அம்சங்கள் காரணமாக இதை விரும்பி வாங்குவார்கள் என தொழிநுட்ப வல்லுனர்கள் நம்புகிறார்கள்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News