பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது Sennheiser earphones!

ஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் இந்தியாவில் தனது புதிய ரேஸ் வயர்லெஸ் இயர்போன்களை - CX 350BT மற்றும் CX 150BT -முறையே ரூ.7,490 மற்றும் ரூ.4,990-க்கு அறிமுகம் செய்துள்ளது.

Last Updated : Mar 3, 2020, 02:21 PM IST
பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது Sennheiser earphones! title=

ஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் இந்தியாவில் தனது புதிய ரேஸ் வயர்லெஸ் இயர்போன்களை - CX 350BT மற்றும் CX 150BT -முறையே ரூ.7,490 மற்றும் ரூ.4,990-க்கு அறிமுகம் செய்துள்ளது.

வேகமான மற்றும் நம்பகமான இணைப்புக்காக இந்த இயர்போன்கள் புளூடூத் 5.0, 10 மணி நேர பேட்டரி ஆயுள் மற்றும் சிறிய வடிவமைப்பு என பல சிறப்பு அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்பை தூண்டியுள்ள இந்த சாதனம் ஆனது வரும் மார்ச் 3 முதல் இந்தியாவின் இசை ஆர்வலர்களுக்கு கிடைக்கும் என்று நிறுவனம் இதுதொடர்பான ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சென்ஹைசர் Smart Control App செயலி போன்ற ஸ்மார்ட் அம்சங்களுடன் வெளிவரும் இந்த CX 350BT, சிரி அல்லது கூகிள் அஸிஸ்டன்டை விரைவாக அணுகுவதற்கான பிரத்யேக குரல் உதவியாளர் பொத்தான் கொண்டிருக்கும் எனவும் இந்த அறிக்கை நமக்கு தெரிவிக்கின்றது.

இதுகுறித்து சென்ஹைசர் எலெக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் நுகர்வோர் பிரிவின் இயக்குனர் கபில் குலாட்டி தெரிவிக்கையில்., "வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை அனுபவிக்க உதவுவதே எங்கள் நோக்கம் ஆகும். எனவே சென்ஹைசரில், எங்கள் கவனம் எப்போதும் புதுமை மற்றும் தொழில்நுட்பம் கொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்சாதனத்துடன் அளிக்கப்படும் நான்கு வெவ்வேறு அளவிலான காது பொத்தான்கள் சரியான, பாதுகாப்பான பொருத்தத்தை அடைவதை எளிதாக்குகின்றன மற்றும் சிறந்த இரைச்சல் தனிமைப்படுத்தலை அளிக்கின்ற எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் சிறப்பம்சமாக, CX 350BT ஆனது AptX  மற்றும் AptX குறைந்த-தாமத ஆதரவையும் கொண்டுள்ளது.

இணக்கமான சாதனங்களில், AptX குறைந்த-தாமதம் திரை செயலுடன் ஒலியை சரியான ஒத்திசைவில் பொறுத்துகிறது. இந்த அம்சத்தின் உதவியால் திரைப்படங்கள் அல்லது கேமிங் வீடியோக்களை வாடிக்கையாளர்கள் மிகவும் வியப்புடன் ரசிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News