புதுடெல்லி: கூகுள் (Google) நிறுவனம் பிக்சல் 6 (Pixel 6) மற்றும் பிக்சல் 6 ப்ரோவை (Pixel 6 Pro) அறிமுகப்படுத்தியுள்ளது. Google தனது புதிய தொலைபேசியில் பெரிய மேம்படுத்தல்களை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. இரண்டு தொலைபேசிகளும் சிறந்த வடிவமைப்பு மற்றும் அற்புதமான கேமராவைக் கொண்டுள்ளன. இதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
Pixel 6 and Pixel 6 Pro specifications
Pixel 6 இல் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.4 இன்ச் FHD+ மென்மையான டிஸ்ப்ளே கொண்டுள்ளது, அதே நேரத்தில் Pixel 6 Pro இல் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரண்டு போன்களிலும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் உள்ளது. இரு மாடல்களிலும் கூகுள் டென்சார் பிராசஸர், டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப், ஆண்ட்ராய்டு 12, ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு ஓ.எஸ். அப்டேட் வழங்கப்படுகிறது.
Also Read | 10 பைசாவில் 1 கி.மீ பயணம்: அசத்தும் Autm 1.0 மின்சார வாகனம்
Pixel 6 and Pixel 6 Pro Colours
பிக்சல் 6 மாடலில் ஸ்டாமி பிளாக், கைண்டா கோரல் மற்றும் சோர்டா சீபோம் நிறங்களில் கிடைக்கிறது. அதே சமயம் பிக்சல் 6 ப்ரோ மாடலில் ஸ்டாமி பிளாக், சோர்டா சன்னி மற்றும் கிளவுடி வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
Pixel 6 and Pixel 6 Pro Price in India
பிக்சல் 6 இன் 8 ஜிபி + 128 ஜிபி விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 44,970, 8 ஜிபி + 256 ஜிபி விலை 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 52,480 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 6 ப்ரோ இன் 12 ஜிபி + 128 ஜிபி விலை 899 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 67,490 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 74,995 என்றும் 12 ஜிபி + 512 ஜிபி விலை 1099 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 82,500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Pixel 6 and Pixel 6 Pro Battery
பேட்டரியை பொருத்தவரை பிக்சல் 6 மாடலில் 4614 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் வழங்கப்பட்டு உள்ளது.
Pixel 6 and Pixel 6 Pro Camera
பிக்சல் 6 மாடலில் 8 எம்பி செல்பி கேமரா, பிக்சல் 6 ப்ரோ மாடலில் 11 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பிக்சல் 6 ப்ரோ மாடலில் 48 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
Read Also | 8 மணி நேரம் தண்ணீரில் இயங்கும் அசத்தல் ஸ்மார்ட்போன் அறிமுகம்; விவரம் இங்கே
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR