Pixel 6A தள்ளுபடி: கூகுள் பிக்சல் 6ஏ ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போனின் முக்கிய அம்சம் இதன் புகைப்படம் எடுக்கும் திறன் ஆகும். இதன் புகைப்பட திறன் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால், பல பயனர்கள் இதை தொழில்முறை புகைப்படம் எடுப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இதில் வலுவான கேமரா மட்டுமின்றி, வலுவான செயல்திறனுக்காக தயார் செய்யப்பட்ட டென்சர் சிப்பும் வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை சுமார் ரூ. 44,000 என்றாலும், வாடிக்கையாளர்கள் விரும்பினால், மிக குறைந்த விலையில் இந்த அருமையான ஸ்மார்ட்போனை வாங்க முடியும். இந்த நேர்த்தியான ஸ்மார்ட்போனை மலிவு விலையில் எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம்.
பிளிப்கார்ட்டில் பெரிய சலுகை
Google pixel 6a வாங்குவதை மிகவும் எளிதாக்க, பிள்ப்கார்ட் ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனில் 31% பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. இந்த தள்ளுபடி சலுகையை பயன்படுத்திய பிறகு, வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனை ரூ. 29,999-க்கு வாங்க முடியும். இந்த தள்ளுபடி பெரிய அளவிலான தள்ளுபடியாக உள்ளது. எனினும், வாடிக்கையாளர்கள் விரும்பினால், இன்னும் அதிகமாக சேமிக்க முடியும்.
எக்ஸ்சேஞ்ச் சலுகை
ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு ரூ. 21,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அதாவது பரிமாற்ற போனஸ் வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸை பயன்படுத்திக்கொண்டால், இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 8,999 அதாவது ரூ. 9,000-ல் வாங்க முடியும்.
மேலும் படிக்க | 5G Phone: ஒரு நாளைக்கு 44 ரூபாய் செலுத்தி Samsung 5G Smartphone வாங்கலாம்
எனினும், வாடிக்கையாளர்கள் தாங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் போன் லேட்டஸ் மாடலாக இருப்பதையும், நல்ல நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த சலுகையை பெற முடியும்.
Google Pixel 6a: அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் பொருத்தப்பட்டிருக்கும் இந்த புதிய கூகுள் ஸ்மார்ட்போன் கூகுள் டென்சர் செயலியில் வேலை செய்கிறது. இதில் 4410எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்படுகிறது. 6.14 இன்ச் முழு எச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு உள்ளது. இதன் பிரதான சென்சார் 12.2எம்பி மற்றும் இரண்டாவது சென்சார் 12எம்பி ஆகும். இந்த போனில் பயனர்களுக்கு 8MP முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆடியோ ஜாக் இல்லை, ஆனால் கூகிள் பிக்சல் 6a ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
மேலும் படிக்க | அமேசானில் கொடிகட்டி பறக்கும் ஒன்பிளஸ் மொபைலின் விற்பனை..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ