வெறும் 299 ரூபாய்க்கு இந்த 5ஜி ஸ்மார்ட்போனை ஃபிளிப்கார்ட்டில் வாங்கலாம்

ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிப்கார்ட்டிலிருந்து, போக்கோ இன் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.15,999க்கு பதிலாக வெறும் ரூ.299க்கு வாங்கலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோம்..

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2022, 01:22 PM IST
  • ஃப்ளிப்கார்ட்டின் சிறந்த சலுகை
  • ரூ.299க்கு இதுபோன்ற 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குங்கள்
  • போனின் சிறப்பம்சங்கள் அற்புதமானவை
வெறும் 299 ரூபாய்க்கு இந்த 5ஜி ஸ்மார்ட்போனை ஃபிளிப்கார்ட்டில் வாங்கலாம் title=

புது டெல்லி: நீங்கள் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், உங்களுக்காக ஒரு அற்புதமான சலுகையை நாங்கள் வழங்குகிறோம். ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிப்கார்ட்டிலிருந்து, போக்கோ இன் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனான போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஐ ரூ.15,999க்கு பதிலாக ரூ.299க்கு வாங்கலாம். இந்த ஒப்பந்தம் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.

போக்கோ இன் 5ஜி ஸ்மார்ட்போனை மலிவாக வாங்கவும்
சந்தையில் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி இன் விலை ரூ.15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட்டில் 15% தள்ளுபடிக்கு பிறகு ரூ.13,499க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது, ஜி.பே, ஃபோன்பே, எஸ்பிஐ-பே, பேடிஎம், ட்ரூகாலர், பீம்-யுபிஐ, ஃப்ரீசார்ஜ், ஆக்சிஸ்-பே, சாம்சங்-பே அல்லது மொபிக்விக் மூலம் பணம் செலுத்தினால், சிறப்பு யுபிஐ சலுகை வழங்கப்படும். அத்துடன் நீங்கள் ரூ. 500 கேஷ்பேக் பெறுவீர்கள், இது போனின் விலையை மேலும் ரூ.12,999 ஆக குறைக்கும்.

மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள்

வெறும் 299 ரூபாய்க்கு போக்கோ எம்3 ப்ரோ 5ஜி 
இந்த ஸ்மார்ட்போனை ரூ.299க்கு வாங்க வேண்டுமானால், அதற்கு உங்கள் பழைய ஸ்மார்ட்போனை விற்க வேண்டும். உண்மையில் ஃபிளிப்கார்ட் இந்த ஒப்பந்தத்தில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்குகிறது, இதில் உங்கள் பழைய ஸ்மார்ட்போனிற்கு ஈடாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.12,700 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த போனின் விலை ரூ.12,999ல் இருந்து வெறும் ரூ.299 ஆகக் குறையும்.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி இன் அம்சங்கள்
போக்கோ இன் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட் செயலியில் வேலை செய்கிறது, இதில் 4ஜிபி ரோம் உடன் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும். 6.5 இன்ச் எச்டி + டாட் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது, இதில் 48எம்பி முதன்மை சென்சார், 2எம்பி இரண்டாவது சென்சார் மற்றும் 2எம்பியின் மூன்றாவது சென்சார் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இதில் உங்களுக்கு 8எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் 5,000எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

மேலும் படிக்க | தள்ளுபடி விலையில் ஐபோன் 12! இன்றே முந்துங்கள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News