ஐகானிக் அம்பாசிடர் காரின் பின்னணியில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பிராண்ட் மீண்டும் வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. அதிலும் மிகவும் கடினமான போட்டி கொண்ட மின்சார வாகன தயாரிப்பில் இறங்கப் போகிறது.
அதுமட்டுமல்ல, ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ், மின்சார இரு சக்கர வாகனங்களை தயாரிப்பதற்காக ஐரோப்பிய பங்குதாரருடன் புதிய கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. களத்தில் தாமதமாக இறங்கினாலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், முதலில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
PTI வெளியிட்டுள்ள செய்திகளின்படி, கூட்டாண்மை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்பு நிறுவனங்கள் அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளை முடிக்க வேண்டியிருக்கிறது. முதலாவதாக, இரு நிறுவனங்களின் நிதிக் கண்காணிப்பு ஜூலையில் தொடங்கி இரண்டு மாதங்கள் தொடரும்.
அது முடிந்ததும், கூட்டு முயற்சியின் தொழில்நுட்ப அம்சங்கள் ஆராயப்படும், இதற்கு மேலும் ஒரு மாதம் ஆகும் என்று ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் இயக்குனர் உத்தம் போஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு, முதலீடுகளின் கட்டமைப்பு முடிவு செய்யப்பட்டு, இறுதியாக புதிய நிறுவனம் உருவாக்கப்படும். இந்த செயல்முறை பிப்ரவரி 15-ம் தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நிறுவனம் உருவான பிறகு, திட்டத்தின் முன்னோடி இயக்கத்தைத் தொடங்க இன்னும் இரண்டு காலாண்டுகள் தேவைப்படும் என்று போஸ் கூறினார். வெளியீட்டு தேதி தொடர்பாகவும் அவர் ஒரு முக்கிய குறிப்பை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் 225 சிசி பைக் சாலையில் களமிறங்குகிறது
அதாவது,கார் தயாரிப்பு அடுத்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் இரு சக்கர வாகனங்களை தயாரிப்பதுடன் நான்கு சக்கர வாகனப் பிரிவிலும் கவனம் செலுத்துகிறது.
"இருசக்கர வாகனத் திட்டம் வணிகமயமாக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நான்கு சக்கர வாகனங்கள் தயாரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்று அந்த அதிகாரி கூறினார்.
எலக்ட்ரானிக் வன்பொருள் மற்றும் மென்பொருளுடன் சில கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு மாற்றீடு தேவைப்படுவதால், அதன் உத்தரபாரா ஆலையில் ரெட்ரோ-பொருத்தப்பட வேண்டும் என்றும் போஸ் கூறினார்.
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் ஒருங்கிணைந்த வசதி குறித்து விவரித்த அவர். நாட்டின் ஒரே அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) என்பதையும் சுட்டிக்காட்டினார். அதன் சொந்த ஃபோர்ஜிங், ஃபவுண்டரி மற்றும் பெயிண்ட் கடை, அத்துடன் உத்தரபாரா ஆலையில் அசெம்பிளி மற்றும் வெல்டிங் வசதியும் உள்ளது.
இருப்பினும், நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் 'அம்பாசிடர்' கார்களுக்கான தேவை இல்லாததால் ஆலையை மூடியது, பின்னர் ஐகானிக் பிராண்டை பிரெஞ்சு வாகன உற்பத்தியாளர் பியூஜியாட் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டது.
மேற்கு வங்க அரசு, உத்தரபாரா ஆலையில் சுமார் 314 ஏக்கர் நிலத்தை மாற்று பயன்பாட்டிற்காக விற்க HMக்கு அனுமதி அளித்தது, அதைத் தொடர்ந்து அந்த பார்சல் ரியல் எஸ்டேட் டெவலப்பருக்கு விற்கப்பட்டது. "ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் இப்போது லாபம் ஈட்டுகிறது மற்றும் முழுமையான கடன் இல்லாத நிறுவனமாக உள்ளது" என்று போஸ் கூறினார்.
மேலும் படிக்க | அடுத்த மாதம் இந்திய சாலைகளில் களமிறங்கும் TVS க்ரூசியர் இரு சக்கர வாகனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR