பழைய சோஷியல் மீடியா அக்கவுண்டை டெலிட் செய்ய வேண்டுமா? இதோ டிப்ஸ்

பழைய சோஷியல் மீடியா அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி? என தெரியாமல் இருந்தால், உங்களுக்கான டிப்ஸ் இங்கே இருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:25 PM IST
பழைய சோஷியல் மீடியா அக்கவுண்டை டெலிட் செய்ய வேண்டுமா? இதோ டிப்ஸ் title=

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட பல சோஷியல் மீடியா தளங்களில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பலர், அந்த கணக்குகளின் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்களை மறந்துவிட்டால், புதிய கணக்குகளை தொடங்குவதை வாடிக்கையாக வைத்திருகின்றனர். இதனால், ஒருவருக்கு பல அக்கவுண்டுகள் ஒரே சோஷியல் மீடியா பிளாட்ஃபார்மில் இருப்பதை பார்க்க முடியும்.

ALSO READ | Upcoming Cars: இந்த மாதம் அறிமுகம் செய்யப்படும் 4 கார்களில் 2 மாருதி கார்களும்!

மேம்போக்காக பார்த்தால் இதனால் என்னவாகும்? என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றலாம். ஆனால், நீங்கள் அறியாமல் செய்யும் மிகப்பெரிய தவறு. உங்களின் தனிப்பட்ட டேட்டாக்களை திருடப்படுவதற்கு இந்த அக்கவுண்டுகளே போதுமானவையாக இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள் சைபர் செக்யூரிட்டி மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் இந்த காலகட்டத்தில் உங்களுடைய கணக்குகள் ஹேக்கர்களின் வசம் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு உள்ளிட்ட தகவல்களை தனியார் ரயில்வே வெப்சைட்கள், நிதி சம்பந்தமான வெப்சைட்டுகள் உள்ளிட்டவைகளில் பதிவு செய்திருந்தால், முதலில் அவற்றை நீங்கள் கட்டாயம் நீக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத எந்தவொரு கணக்கிலும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் இருக்கக்கூடாது. குறிப்பாக, பிறந்தநாள், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட தகவல்கள் இருக்கக்கூடாது. 

எப்படி கண்டுபிடிப்பது?

உங்கள் இமெயிலுக்கு செல்லுங்கள். அங்கு நீங்கள் பதிவு செய்யப்பட்ட சோஷியல் மீடியாக்களின்  Welcome மெசேஜ் இருக்கும். இந்த மின்னஞ்சல்கள் மூலம் உங்கள் பழைய கணக்குகளை கண்டறிந்து அவற்றில் இருக்கும் தகவல்களை நீக்குங்கள். ஒருவேளை அதில் ஏதேனும் சிக்கலை நீங்கள் எதிர்கொண்டால், உடனடியாக அந்த வெப்சைட் கொடுத்திருக்கும் உதவிமையம் (Help Desk)- ஐ தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் மூலமாக உங்களின் தரவுகளை நீக்குங்கள். அவர்கள் சரியாக நீக்கியிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். பிரைவசி பாலிசியிலும் (privacy policy) கணக்கை நீக்குவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை படித்துப் பார்த்தும் உங்கள் கணக்கை நீக்கிக் கொள்ளலாம்.

ALSO READ | Motorola புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, பிற விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News