உஷார்! பாஸ்வேர்டு திருடும் பாஸ் ஜென் - செயற்கை நுண்ணறிவில் இருக்கும் ஆபத்து

பாஸ்ஜென் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பாஸ்வேர்டை எளிதில் கண்டுபிடித்துவிடுவதால், இது தனிநபர் இணைய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 18, 2023, 12:59 PM IST
உஷார்! பாஸ்வேர்டு திருடும் பாஸ் ஜென் - செயற்கை நுண்ணறிவில் இருக்கும் ஆபத்து title=

சாட்ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் புதிய புரட்சியை டெக் உலகில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மூலம் வரும் ஆபத்துகள் மக்களை கவலையில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பாஸ்ஜென் போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், ஒருவரின் பாஸ்வேர்டை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகிறது. இது ஒருவரின் இணைய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்ற கவலை டெக் உலகினரிடையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  

பாஸ்வேர்டை கண்டுபிடிக்கும் இந்த பாஸ் ஜென் என்ற செயற்கை நுண்ணறிவு பிளாட்பார்ம், 60 நொடிகளுக்கு உள்ளாகவே ஒருவரின் 51% பாஸ்வேர்டை கண்டுபிடித்துவிடுகிறது. ஒரு மணி நேரத்தில் 65%, ஒரு நாளைக்குள் 71% பாஸ்வேர்டை கண்டுபிடித்துவிடும். 81% பாஸ்வேர்டை கண்டறிவதற்கு ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது. இந்த தொழில்நுட்பம் ஆபத்தானவையாக பார்க்கப்படுகிறது. இதில் இருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள பாஸ்வேர்டு உருவாக்குவதில் என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | கூகுள் பிளேஸ்டாரில் ஆபத்தான மால்வேர்: ஆபத்தில் ஆண்ட்ராய்டு போன்கள்

கடினமான பாஸ்வேர்ட்: எப்போது பாஸ்வேர்டு உருவாக்கும்போதும் எழுத்துக்களின் அளவுகள், எண்கள் மற்றும் குறியீடுகளை ஒன்றிணைத்து யூகிக்க முடியாத வலுவான பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். பிறந்த தேதி, நமது பெயர் போன்ற மிகவும் எளிதாக கணிக்கக்கூடிய பாஸ்வேர்டுகளை ஒருபோதும் உங்கள் இணைய பயன்பாடுகளுக்கு உபயோகிக்காதீர்கள்.

கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜர்: உங்களது அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இவ்வாறு நீங்கள் பயன்படுத்தும் போது உங்களது அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கான பாஸ்வேர்டு அனைத்தும் கூகுள் கணக்கில் சேமிக்கப்படும். எனவே அனைத்து பாஸ்வேர்டுகளுக்கும் மாஸ்டர் பாஸ்வேர்ட் ஒன்றை மட்டுமே நீங்கள் நினைவு கொண்டால் போதுமானது

இரு காரணி அங்கீகாரம்: (two step verification) இரு காரணி அங்கீகாரம் எனப்படும் முறையில் உங்களது ஆன்லைன் கணக்குகளுக்கும் பாஸ்வேர்டுக்கும் மற்றுமொரு கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது. இதன் மூலம் நீங்கள் உங்களது பாஸ்வேர்டை உள்ளீடு செய்தாலும் கூட, அதனை உறுதி செய்யும் வகையில் உங்களது மொபைலுக்கு ரகசிய குறியீடு ஒன்று அனுப்பப்படும் அல்லது நீங்கள் லாகின் செய்ததை உங்கள் மொபைலில் ஓகே செய்தால் மட்டுமே உங்களது அக்கவுண்ட் ஓபன் ஆகும்.

வி பி என் பயன்பாடு: இணையத்தின் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் அனைத்தையுமே விபிஎன் ஆன் செய்து செய்யும் போது, நமது ஐ பி அட்ரஸ் ஆகியவற்றை இவை மறைத்து விடுகிறது. இதன் காரணமாக ஹேக்கர்கள் மற்றும் மற்றவர்கள் உங்களது இணைய செயல்பாடுகளை கண்டறிவது கடினம்.

செக்யூரிட்டி அப்டேட்ஸ்: வெப் பிரவுசர் மற்றும் சாஃப்ட்வேர்கள் அனைத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். இது உங்களை ஆன்லைன் தாக்குதல்கள் மற்றும் ஹேக்கிங் செய்வதிலிருந்து பாதுகாக்கும் ஒரு சிறந்த வழிமுறை.

பிஷ்ஷிங் ஆபத்து: ஒருவரின் தகவல்களை திருடுவதற்கு பயன்படுத்தப்படும் பிஷ்ஷிங் முயற்சிகளான குறுஞ்செய்திகள், இமெயில்கள் உங்களுக்கு வரும். அதில் வரும் லிங்குகளை நீங்கள் ஒருபோதும் கிளிக் செய்யக்கூடாது. இதன் மூலம் உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் ஹேக் செய்யப்பட்டு, தகவல்கள் திருடப்படலாம். 

மேலும் படிக்க | Vivo-வின் 64MP கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜ் போன் ரூ.6,333-க்கு வாங்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News