புது டெல்லி: வாட்ஸ்அப் அதன் அம்சத்தை தவறாமல் புதுப்பித்துக்கொண்டே இருப்பதால், அதைப்பயன்படுத்தும் பயனருக்கு சிறந்த அனுபவத்தைப் பெற முடிகிறது. இப்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்காக ஒரு புதிய மேம்பட்ட தேடல் (Advanced Search Mode) முறை அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர் வாட்ஸ்அப்பில் அரட்டை, புகைப்படங்கள், ஜிஃப்கள், ஆடியோ, வீடியோ, ஆவணங்கள் போன்றவற்றை மிக எளிதாக தேட முடியும். இருப்பினும், இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு (Beta Users) மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அம்சம் ஒரு மாதத்திற்கு முன்பே iOS அம்ச மொபைல் பயனர்களுக்கு கிடைத்தது.
எப்படி உபயோகிப்பது?
Android பீட்டா பதிப்பைக் கொண்ட பயனர்களுக்கு மேம்பட்ட தேடல் முறை வெளியிடப்பட்டது. இதற்காக, பயனர் பீட்டா பதிப்பு 2.20.197.7 க்கு புதுப்பிக்க வேண்டும். பீட்டா பதிப்பு புதுப்பிப்பைச் செய்த பிறகும் இந்த அம்சத்தை நீங்கள் பெறவில்லை என்றால், நீங்கள் மீண்டும் வாட்ஸ்அப்பை பதவிறக்கம் செய்ய வேண்டும். அதன்பிறகும் இந்த அம்சத்தை உங்கள் போனில் வரவில்லை என்றால், நிலையான பதிப்பு வெளியிடப்படுவதற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும்.
மேம்பட்ட தேடல் பயன்முறையைப் பயன்படுத்த, பயனர் மேல் பட்டியில் உள்ள தேடல் ஐகானைத் தட்ட வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் ஒரு குறிப்பிட்ட கோப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அதாவது படம், வீடியோ, கோப்புகள், ஜிப், ஆடியோ அல்லது இணைப்பு போன்றவை. இதற்குப் பிறகு, நீங்கள் உங்கள் அரட்டையில் கோப்பை எளிதாக தேட முடியும்.
இந்த புதிய அம்சங்கள் வருகின்றன:
இது தவிர, வாட்ஸ்அப் (Whatsapp) நிறுவனம் ஒரு புதிய ரிங்டோன் அம்சத்தை கொண்டு வருகிறது, இது குழு அழைப்புகள் மற்றும் தனிப்பட்ட அழைப்புகளுக்கு வெவ்வேறு ரிங்டோன்களைக் கொண்டிருக்கும். இந்த அம்சம் பீட்டா பதிப்பு பயன்பாட்டிலும் உள்ளது. கூடுதலாக, வாட்ஸ்அப் புதிய அனிமேஷன் ஸ்டிக்கர்களையும் பயனருக்கு வழங்கப் போகிறது. இதுபோன்ற அம்சங்கள் அரட்டையின் அனுபவத்தை நிறையவே மாற்றும்.
ALSO READ | Coming soon: விரைவில் WhatsApp-ஐ 4 வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்தலாம்!!