ஜியோ சிம்கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ டிவி மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்டுத்தும் சலுகையை ஜியோ நிறுவனம் கொடுக்கிறது. ஒவ்வொரு பிளான்களுக்கு ஏற்ப ஜியோ சந்தா மற்றும் ஜியோ சினிமா, டிவி உள்ளிட்ட அதன் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அந்தவகையில் ஜியோ பிளான்களில் ஜியோ டிவியை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள், அதன் நேரலையை வீட்டில் இருக்கும் டிவியுடன் இணைத்து நேரலையைக் காணலாம்.
மேலும் படிக்க | iPhone 13 மற்றும் SE 3 ஐபோன்களின் உற்பத்தியை Apple குறைப்பதன் பின்னணி
ஸ்மார்ட்போனில் ஜியோ டிவியை பதிவிறக்கம் செய்து காணும் வாடிக்கையாளர்கள், லேப்டாப் மற்றும் தொலைக்காட்சிகளில் செயலியை பதிவிறக்கம் செய்து பார்க்க முடியாது. ஆனால், இதனை செய்யாமலேயே நீங்கள் ஜியோ டிவியை உங்கள் தொலைக்காட்சியில் பார்க்க சில ஆப்சன்கள் உள்ளன. அதற்கு நீங்கள் உங்கள் கணினியில் ப்ளூஸ்டாக்ஸ் ஆண்ட்ராய்டு எமுலேட்டரை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். பின்னர், Google Play Store க்குச் செல்ல வேண்டும், அங்கு பயனர்கள் தங்கள் Google கணக்குடன் லாகின் செய்ய வேண்டும்.
அதில் JioTV பயன்பாட்டைக் கண்டுபிடித்து, பதிவிறக்க வேண்டும். அதன்பின்னர், பயனர்கள் இந்த பயன்பாட்டை Bluestacks ஹோம் பேஜில் பார்ப்பார்கள். இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பயன்பாட்டைப் பயன்படுத்த உங்களுக்கு ஜியோ எண் அவசியம். அடுத்தபடியாக, உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதனை நீங்கள் சரியாக உள்ளிட்டவுடன், மடிக்கணிணியில் ஜியோ டிவியை பார்க்கலாம்.
டிவியில் ஜியோடிவி பார்ப்பது எப்படி?
உங்கள் டிவியில் ஜியோ டிவி பயன்பாட்டைப் பார்க்க விரும்பினால், நீங்கள் மிகவும் எளிமையான முறையைப் பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்கள் லேப்டாப்பை டிவியுடன் இணைக்க வேண்டும். இதற்காக, பயனர்கள் HDMI கேபிளைப் பயன்படுத்தலாம். மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி லேப்டாப்பில் ஜியோ டிவியை நிறுவிய பிறகே டிவியில் பார்க்க முடியும். டிவி மற்றும் மடிக்கணினியை இணைத்த பிறகு, பயனர்கள் டிவி ரிமோட்டில் இருந்து HDMI பயன்முறையை இயக்க வேண்டும், பின்னர் அவர்கள் டிவி திரையில் ஜியோ டிவி உள்ளடக்கத்தைப் பார்க்க முடியும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR