புதுடில்லி: அக்டோபர் 13 ஆம் தேதி ஒரு பெரிய மெய்நிகர் நிகழ்வில் ஆப்பிள் (Apple) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iPhone 12 சீரீசின், iPhone 12 மினி, iPhone 12, iPhone 12 ப்ரோ மற்றும் iPhone 12 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு தொடர்களை அறிமுகப்படுத்தியது.
இப்போது அனைவரும் எதிர்பார்த்த புத்தம் புதிய iPhone வெளிவந்துவிட்ட பிறகு, Apple பழைய iPhone-களின் விலையை குறைத்துள்ளது. இந்தியாவில் விலைக் குறைப்புக்குப் பிறகு (மிகக் குறைந்த முதல் மிக உயர்ந்த வரிசையில்) பழைய iPhone மாடல்களின் விலை உங்களுக்காக இதோ:
iPhone SE (2020) 64GB ஸ்டோரேஜ் : ரூ 39,900
iPhone SE (2020) 128GB ஸ்டோரேஜ் : ரூ 44,900
iPhone XR (2020) 64GB ஸ்டோரேஜ் : ரூ 47,900
iPhone XR (2020) 128GB ஸ்டோரேஜ் : ரூ 52,900
iPhone SE (2020) 256GB ஸ்டோரேஜ் : ரூ 54,900
iPhone 11 64GB ஸ்டோரேஜ் : ரூ 54,900
iPhone 11 128GB ஸ்டோரேஜ் : ரூ 59,900
iPhone 11 256GB ஸ்டோரேஜ் : ரூ 69,900
iPhone 12 மினி, iPhone 12, iPhone 12 ப்ரோ மற்றும் iPhone 12 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஃபோன்களை வாங்க விரும்பும் நபர்களுக்கு, இந்த வகைகளில் விலை மற்றும் அவற்றின் விற்பனை குறித்த விவரங்கள் இங்கே உள்ளது.
ALSO READ: Tech Alert: உங்கள் வங்கிக் கணக்கை குறிவைக்கும் இந்த 34 App-களை தடை செய்தது Google
iPhone 12 மினி, 64GB ஸ்டோரேஜ் உள்ள ஃபோனின் விலை ரூ.69,900 ஆகவும் 128GB ஸ்டோரேஜ் உள்ள ஃபோனின் விலை ரூ.74,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 256GB ஸ்டோரேஜ் உள்ள ஃபோனின் விலை ரூ. 84,900 ஆகும்.
64GB iPhone 12-ன் விலை ரூ. 79,900 ஆகவும், 128GB ரூ. 84,900 ஆகவும் 256GB ரூ. 94,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
iPhone 12 ப்ரோ 128GB ஸ்டோரேஜ் மாடல் 1,19,900 ரூபாய்க்கும், அதன் 256GB மற்றும் 512GB ஸ்டோரேஜ் மாடல்கள் முறையே ரூ. 1,29,900 மற்றும் ரூ. 1,49,900 ஆக விற்கப்படும்.
iPhone 12 புரோ மேக்ஸ் 128GB ஸ்டோரேஜின் விலை ரூ. 1,29,900 ரூபாயாகவும், அதன் 256GB ஆப்ஷனின் விலை 1,39,900 ரூபாயாகவும், 512GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 1,59,900 ரூபாயாகவும் உள்ளன.
iPhone 12 மினி மற்றும் iPhone 12 கருப்பு, நீலம், பச்சை, பிராடக்ட் (RED) மற்றும் வெள்ளை வண்ண வகைகளில் கிடைக்கும். iPhone 12 புரோ மற்றும் iPhone 12 ப்ரோ மேக்ஸ் தங்கம், கிராஃபைட், பசிபிக் நீலம் மற்றும் வெள்ளி ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.
இந்தியாவில், iPhone 12 அக்டோபர் 30 முதல் விற்பனைக்கு வரும். இந்தியாவில் iPhone 12 ஐத் தவிர மற்ற மாடல்கள் இந்தியாவில் கிடைப்பது குறித்த அறிவிப்புகள் இன்னும் வரவில்லை.
ALSO READ: Tech Guide: உங்கள் பழைய mobile-ஐ விற்க வேண்டுமா? பயனுள்ள சில குறிப்புகள் இதோ!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR