அக்னி -1 ஏவுகணையை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது....

கண்டம் விட்டு கண்டம் பாயயும் அக்னி-1 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது....

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Oct 31, 2018, 10:03 AM IST
அக்னி -1 ஏவுகணையை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது....

கண்டம் விட்டு கண்டம் பாயயும் அக்னி-1 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது....

கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதிநவீனத் தொழில்நுட்பம் கொண்ட அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோரில் அமைந்துள்ள அப்துல்கலாம் ஏவுதளத்திலிருந்து நேற்று காலை 8.30 மணியளவில் இந்த ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 12 டன் எடையுள்ள அக்னி-1 ஏவுகணை குறிப்பிட்ட நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து துல்லியமாக தாக்கியது.

இந்த ஏவுகணை சுமார் 1000 கிலோ எடையை தூக்கிச் செல்லக்கூடிய திறனுடையது என ரானுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 15 மீட்டர் நீளமுள்ள அக்னி-1 முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, ஏற்கனவே ராணுவத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.