Fliplart Year End Sale: வெறும் ரூ.11,624-ல் லேட்டஸ்ட் iPhone வாங்க சூப்பரான வாய்ப்பு

இந்த விற்பனையில், சில நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய சலுகைகளைப் பெற முடியும். இந்த பதிவில் iPhone SE இல் கிடைக்கும் டீலைப் பற்றி பார்க்கலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2021, 10:31 AM IST
  • iPhone SE இல் பல வித சலுகைகளும் தள்ளுபடிகளும் கிடைக்கின்றன.
  • Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 5% அதாவது ரூ.1,425 கேஷ்பேக் கிடைக்கும்.
  • பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்து, iPhone SE-ஐ வாங்கினால், ரூ.15,450 வரை கூடுதலாக சேமிக்கலாம்.
Fliplart Year End Sale: வெறும் ரூ.11,624-ல் லேட்டஸ்ட்  iPhone வாங்க சூப்பரான வாய்ப்பு title=

ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் அதன் பயனர்களுக்கு அவ்வப்போது பல சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது. பிளிப்கார்டின் விவோ கிறிஸ்துமஸ் கார்னிவல் விற்பனை (Vivo Christmas Carnival ) நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அதாவது டிசம்பர் 26 முதல், Smartphone Year End Sale தொடங்கியுள்ளது. 

பிளிப்கார்டின் (Flipkart) இந்த விற்பனையில், சில நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய சலுகைகளைப் பெற முடியும். இந்த பதிவில் iPhone SE இல் கிடைக்கும் டீலைப் பற்றி பார்க்கலாம். இந்த டீலில் இந்த சிறந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனை ரூ.39,900-க்கு பதிலாக வெறும் ரூ.11,624-க்கு வாங்கலாம். 

iPhone SE இல் பெரும் தள்ளுபடியைப் பெறலாம்

இந்த பதிவில் iPhone SE இன் 64GB மாறுபாடு பற்றி காணலாம். ரூ.39,900 என்ற விலையில் விற்கப்படும் இந்த ஐபோனில் 28% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடிக்கு பிறகு இந்த போனை வெறும் ரூ.28,499-க்கு வாங்க முடியும். இந்த மொபைல் வாங்கும் போது Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 5% அதாவது ரூ.1,425 கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் வெறும் ரூ.27,074-க்கு இந்த போனை வாங்க வாய்ப்பு கிடைக்கும். 

ALSO READ | Flipkart Oppo Advance Days; வெறும் ரூ.740க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் 

12 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் iPhone SE-ஐ வாங்குவது எப்படி? 

இதுவரை கிடைத்த தள்ளுபடிகளால் iPhone SE-ஐ ரூ.39,900-க்கு பதிலாக வெறும் ரூ.27,074-க்கு எப்படி வாங்குவது என தெரிந்து கொண்டோம். இது தவிர, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்து, iPhone SE-ஐ வாங்கினால், ரூ.15,450 வரை கூடுதலாக சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ரூ.27,074-க்குப் பதிலாக வெறும் ரூ.11,624க்கு இந்த iPhone SE-ஐ வாங்க முடியும். 

iPhone SE: அம்சங்கள்

இந்த டீலில் iPhone 12-இன் 64 ஜிபி மாறுபாட்டைப் பற்றி பேசுகிறோம். A13 பயோனிக் சிப்பில் பணிபுரியும் இந்த ஐபோனில், 12MP சென்சார் கொண்ட ஒற்றை பின்புற கேமராவைப் பெறலாம். மேலும், செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் 7எம்பி முன்பக்க கேமரா உள்ளது. 4ஜி சேவைகளை ஆதரிக்கும் இந்த ஆப்பிள் ஐபோன் 4.7 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இது ஒரு டூயல் சிம் போன் ஆகும்.

விரைவான சார்ஜிங் வசதியுடன் உள்ள இந்த iPhone 12 ஐ வாங்கும்போது, ​​அதன் பெட்டியில் ஃபோன், USB Type-C லைட்னிங் கேபிள் மற்றும் ஃபோனின் வழிமுறை மற்றும் செயல்முறைகளை விளக்கும் ஆவணங்கள் கிடைக்கும். பிராண்ட் இந்த போனுக்கு ஒரு வருட வாரண்டியையும் வழங்குகிறது.

பிளிப்கார்டின் ஸ்மார்ட்போன் (Smartphone) ஆண்டு இறுதி விற்பனையில் (Flipkart Smartphone Year End Sale) இருந்து இதுபோன்ற அனைத்து சலுகைகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விற்பனை டிசம்பர் 30 வரை மட்டுமே இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். 

ALSO READ | Flipkart The Grand Gadget Days: அசத்தும் விற்பனையில் ரூ.46,000 லேப்டாப்பின் விலை வெறும் ரூ.19,000!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News