ஸ்வாட் ஏர்லிட் 004 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீட்டை தொடர்ந்து புதிதாக நெக்பேண்ட் ரக இயர்போனை ஸ்வாட் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. புதிய நெக்பேண்ட் இயர்போன் ஸ்வாட் நெக்கான் 101 என அழைக்கப்படுகிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் ஊதா மற்றும் கறுப்பு என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்போன் ஹெச்டி ஸ்டீரியோ சவுண்ட் வழங்குகிறது. இதில் உள்ள மென்மையான சிலிகான் காதுகளில் எவ்வித எரிச்சலையும் ஏற்படுத்தாது என்பது கவனிக்கத்தக்கது.
நீண்ட நேர பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த இயர்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் IPX67 தர வாட்டர் ப்ரூப் வசதி, 55 மில்லிசெகண்ட் லேடன்சி வழங்குகிறது. இது கேமிங்கின் போதும் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும்.
மேலும் படிக்க | வருஷம் முழுவதும் ஆஃபர்களை அள்ளி கொடுக்கும் ஏர்டெல்! இந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யுங்க
ஸ்வாட் நெக்கான் 101 நெக்பேண்ட் இயர்போனை 40 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு மியூசிக், அழைப்புகள் உள்ளிட்டவைகளை போனை பார்க்காமலேயே இயக்க முடியும்.
தலைசிறந்த டிசைன் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற வசதிகள் சௌகரியமான அனுபவத்தை வழங்குகின்றன. இதன் இயர்போன்கள் காந்தம் மூலம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கிறது. மேலும் இதில் ப்ளூடூத் 5.0 வசதி மற்றும் டூயல் பேரிங் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன்களில் 10mm டிரைவர்கள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 40 ஆயிரம் ரூபாய் கூகுள் மொபைல் வெறும் ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனை
மேலும் படிக்க | Used Cars: 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சூப்பர் கார்கள்
மேலும் படிக்க | Mi Clearance Sale: ரூ.4,000-க்கும் குறைவான விலையில் அசத்தல் ரெட்மி போன்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ