Jio வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த வழியில் இலவசமாக கிடைக்கும் 43gb data

நாட்டின் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனமான ஜியோ, குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்கும் பல அற்புதமான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை பயனர்களுக்கு வழங்குகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2022, 01:09 PM IST
  • ஜியோ அவ்வப்போது பல நல்ல திட்டங்கள் மூலம் தனது பயனர்களை மகிழ்விக்கின்றது.
  • ஜியோ, 2022 புத்தாண்டுக்கான சிறப்பு புதிய சலுகையை வெளியிட்டது.
  • இந்த சலுகையின் கடைசி தேதியை ஜியோ நீட்டித்துள்ளது.
Jio வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த வழியில் இலவசமாக கிடைக்கும் 43gb data title=

புது தில்லி: தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ அவ்வப்போது பல நல்ல திட்டங்கள் மூலம் தனது பயனர்களை மகிழ்விக்கின்றது. இன்று நாட்டின் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனமாக இருக்கும் ஜியோ, குறைந்த விலையில் அதிக பலன்களை வழங்கும் பல அற்புதமான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை அதன் பயனர்களுக்கு வழங்குகிறது. 

சமீபத்தில், ஜியோ (Jio), 2022 புத்தாண்டுக்கான சிறப்பு புதிய சலுகையை வெளியிட்டது. அதற்கு 'ஹேப்பி நியூ இயர் 2022' (‘Happy New Year 2022’ ) என்று பெயரிடப்பட்டது. இந்தச் சலுகையின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜியோ பயனர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சலுகையின் கடைசி தேதியை ஜியோ நீட்டித்துள்ளது

ஜியோவின் 'ஹேப்பி நியூ இயர் 2022' சலுகையைப் பயன்படுத்த பயனர்களுக்கு ஜனவரி 2 வரை மட்டுமே அவகாசம் இருந்தது. ஆனால் இப்போது Jio இந்த சலுகையின் கடைசி தேதியை ஜனவரி 7 வரை நீட்டித்துள்ளது. இந்த சலுகையில் கொடுக்கப்பட்டுள்ள ரூ.2545 திட்டத்தில், 365 நாட்களுக்கு பல நன்மைகளைப் பெற முடியும்.

இந்த திட்டத்தில் தினசரி டேட்டா கிடைக்கும்

இந்தத் திட்டத்தின் விலை இன்னும் ரூ. 2,545 ஆகவே உள்ளது. இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், பயனர்களுக்கு தினசரி 1.5 ஜிபி இணைய வசதி வழங்கப்படும். தினசரி டேட்டா வரம்பு முடிந்ததும், இணைய வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும். ஒட்டுமொத்தமாக, இந்த திட்டத்தில் பயனர்கள் 547.5 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள்.

ALSO READ | Vi அதிரடி ரீசார்ஜ் திட்டம்; மிரண்டுபோன Airtel மற்றும் Jio

இந்த திட்டத்தின் மற்ற நன்மைகள்

இந்த திட்டத்தில் (Recharge Plan), ஜியோ இணையத்துடன் பல நன்மைகளை வழங்குகிறது.  ரூ.2,545 -க்கான இந்த திட்டத்தில் தினசரி டேட்டாவுடன், அனைத்து நெட்வொர்க்கிலும் வரம்பற்ற வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கும். 

மேலும், OTT நன்மைகளைப் பற்றி பேசுகையில், ஜியோ கிளவுட், ஜியோ மியூசிக், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா போன்ற அனைத்து ஜியோ செயலிகளுக்கும் (Jio Apps) இலவச சந்தா வழங்கப்படும்.

இதற்கு முன் இருந்த திட்டம் என்ன?

ஜியோ ஒரு புதிய சலுகையை வெளியிட்டது. இது பழைய ப்ரீபெய்ட் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாக இருந்தது. இந்த திட்டத்தில், முன்னர் பயனர்களுக்கு 336 நாட்களுக்கு குரல் அழைப்பு, டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் OTT நன்மைகள் கிடைத்தன. புத்தாண்டு அன்று வெளியிடப்பட்ட இந்த 'ஹேப்பி நியூ இயர் 2022' சலுகையில், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜியோவின் இந்த கவர்ச்சிகரமான சலுகையை நீங்களும் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், ஜியோவின் இந்த 'ஹேப்பி நியூ இயர் 2022' சலுகை, ஜியோவின் மொபைல் செயலியான 'மை ஜியோ ஆப்' இல் மட்டுமே கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சலுகைக்கான கடைசித் தேதி ஜனவரி 7 என்பதையும் பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

ALSO READ | WoW! சூப்பர் ஆஃபர்! OTT சந்தாக்களுடன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் ரெடி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News