வெறும் ரூ. 11,999 -க்கு ஐபோன் 14-ஐ வாங்குவது எப்படி? பிளிப்கார்ட்டில்... இப்படி

iPhone 14: நீங்கள் ஐபோன் ரசிகராக இருந்து, குறைந்த விலையில் பெரிய திரை கொண்ட ஐபோனை வாங்க விரும்பினால், இதன் மூலம் அதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 22, 2023, 10:12 AM IST
  • ஐபோன் 14 பிளஸ் வாங்க, எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
  • அதன் பிறகு போனின் விலை ரூ.72,999 ஆக குறையும்.
  • அதன் பிறகு இதில் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அதாவது பரிமாற்ற சலுகையும் உண்டு.
வெறும் ரூ. 11,999 -க்கு ஐபோன் 14-ஐ வாங்குவது எப்படி? பிளிப்கார்ட்டில்... இப்படி  title=

ஐபோன் 15 அறிமுகத்திற்காக ஐபோன் பிரியர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த வேளையில் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, ஐபோன் 14 பிளஸ் விலையில் திடீர் குறைப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் இதை எளிதாக வாங்கலாம். ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் 76,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத குறைந்த விலையாகும். 

நீங்கள் ஐபோன் ரசிகராக இருந்து, குறைந்த விலையில் பெரிய திரை கொண்ட ஐபோனை வாங்க விரும்பினால், இதன் மூலம் அதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கும். வங்கி ஆஃபர்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களின் உதவியுடன் மிகக் குறைந்த விலையில் இதை வாங்கலாம். குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போனை எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம். 

iPhone 14 Plus: சலுகைகள் & தள்ளுபடிகள்

ஐபோன் 14 பிளஸ் (128 ஜிபி) ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ரூ. 89,900 ஆகும். எனினும் பிளிப்கார்ட்டில் இதன் விலை வெறும் ரூ.76,999. இந்த தொலைபேசியில் ரூ.12,901, அதாவது முழுமையாக 14 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல. இதனுடன் இதில் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைப்பதால் போனின் விலை கணிசமாகக் குறையும். 

மேலும் படிக்க | ரூ.20,000-க்குள் இருக்கும் சிறந்த 5G போன்கள்

iPhone 14 Plus: வங்கிச் சலுகை

ஐபோன் 14 பிளஸ் வாங்க, எச்டிஎஃப்சி வங்கியின் (HDFC Bank) கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.72,999 ஆக குறையும். அதன் பிறகு இதில் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அதாவது பரிமாற்ற சலுகையும் உண்டு.

iPhone 14 Plus: எக்ஸ்சேஞ் ஆஃபர்

ஐபோன் 14 பிளஸ்ஸில் 61 ஆயிரம் ரூபாய் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பெறலாம். எனினும் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள, தங்கள் பழைய ஸ்மார்ட்போன் நல்ல நிலையில் இருப்பதையும் லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் 61 ஆயிரம் முழு தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெற முடியும். 61 ஆயிரத்திற்கான முழு தள்ளுபடியை பெற முடிந்தால், போனின் விலை ரூ.11,999 ஆக குறையும். 

கூடுதல் தகவல்:

ஐபோன் 15 சீரிஸ்: ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸை அடுத்த மாதம் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப் போகிறது. ஆனால் இதற்கு முன்னரே ஒரு பெரிய தகவல் முன்வந்துள்ளது. இதை அறிந்த பிறகு கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சும் பெருமையுடன் விரிவடையும்.  ஐபோன் 15 உற்பத்தி தமிழகத்தில் உள்ள ஆலையில் தொடங்கியுள்ளது. இந்த பெரிய பொறுப்பு Foxconn நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இது ஒரு பெரிய படியாக இருக்கும். இதன் மூலம், இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் விலையும் குறைவாகவே இருக்கும். இது பயனர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது.

'மேக் இன் இந்தியா' முயற்சியின் கீழ் 'ஐபோன் 15' ஐ தயாரிப்பிற்கு பிறகு, நிறுவனம் இப்போது அதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. குறுகிய காலத்தில் மற்ற நாடுகளுக்கு 'ஐபோன் 15' வழங்குவதைத் தொடங்குவதே நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள். இந்தியாவில் உள்ள பிற ஆப்பிள் சப்ளையர்களான பெகாட்ரான் மற்றும் விஸ்ட்ரான் (டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது) ஆகியவையும் 'ஐபோன் 15'  -ஐ அசெம்பிள் செய்வதற்கான வழிமுறையை விரைவில் செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆப்பிள் இந்தியாவில் 'ஐபோன் 14' ஐ அசெம்பிள் செய்யத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ரெட்மியின் 2 அற்புதமான ஸ்மார்ட்போன்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News