முன்னணி ஸ்மார்ட்போன்களை பாதி விலையில் வாங்கிட வந்துவிட்டது Flipkart offer Sale!

இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் Flipkart Big Saving Days சலுகை விற்பனை அதிரடியாக துவங்கப்படவுள்ளது.

Updated: Jun 18, 2020, 10:34 PM IST
முன்னணி ஸ்மார்ட்போன்களை பாதி விலையில் வாங்கிட வந்துவிட்டது Flipkart offer Sale!
IMAGE FOR REPRESENTATION

இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் Flipkart Big Saving Days சலுகை விற்பனை அதிரடியாக துவங்கப்படவுள்ளது.

ஜூன் 23 முதல் துவங்கும் இந்த Flipkart Big Saving Days விற்பனையில் ஆப்பிள் ஐபோன் 8, விவோ நெக்ஸ், கூகிள் பிக்சல் 3ஏ போன்ற முன்னணி சாதனங்கள் மாபெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை ஜூன் 27 வரை என நான்கு நாட்கள் நீடிக்கும் என நிறுவனத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

முந்துங்கள்: 80% வரை தள்ளுபடி விலையில் அதிரடி விற்பனை; அசத்தும் flipkart!...

பயனர்களுக்கு கூடுதல் சலுகையாக HDFC அட்டைதாரர்களாக இருந்தால் 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். ஸ்மார்ட்போன்களுடன், மின்சார உபகரணங்கள் மற்றும் பேஷன் அணிகலன்களிலும் இந்த சலுகைகள் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart வலைதளத்தினை பயன்படுத்தி வாங்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றிய விவரங்களை Flipkart வெளியிட்டுள்ளது. இந்த தள்ளுபடியின் படி விவோ இசட் 1 எக்ஸ் ரூ.4000 விலைக் குறைப்பு கண்டு ரூ.14,990-க்கு கிடைக்கும். இதேபோல், மோட்டோ ரேஸ்ர், ஐபோன் எக்ஸ்எஸ் மற்றும் பிற பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 போன்ற விலையுரந்த போன்களுக்கான விலையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐபோன் 8-னை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தியது, எனினும் மின் சில்லறை விற்பனையாளர் இன்னும் சாதனங்களை விற்பனை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 4 நாட்களுக்கு Flipkart-ல் லேப்டாப் போனான்ஸா ஆபர் மழை - முழு விவரம்!...

விற்பனையின் போது தள்ளுபடியைப் பெறும் ஸ்மார்ட்போன்கள் விவரம்...

  • ரூ.37,999 மதிப்புள்ள Mi மிக்ஸ் 2 விற்பனையின் போது ரூ.14,999-க்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 6GB ROM மற்றும் 128GB சேமிப்பு திறன் கொண்டுள்ளது. இது 3400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் ஸ்னாப்டிராகன் 835 ஆல் இயக்கப்படுகிறது.
  • 128 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட விவோ நெக்ஸ் 8 ஜிபி வேரியண்ட்-க்கு விலை ரூ.23,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.39,990 ஆகும். இது ஒரு பாப்-அப் கேமராவை கொண்டுள்ளதால் பிரபலம் பெற்றது. இந்த தொலைபேசி ஸ்னாப்டிராகன் 845-ஆல் இயக்கப்படுகிறது.
  • ஒரு காலத்தில் சிறந்த விற்பனையான ஆப்பிள் ஐபோன்களில் ஒன்றாக இருந்த ஐபோன் 7, 32 ஜிபி வேரியண்டிற்கு ரூ .28,499 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஐபோன் 7 பிளஸ் 32GB வேரியண்டிற்கான விலை ரூ.34,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த விற்பனையின் போது Google Pixel 3a ஆனது ரூ.29,999-க்கு கிடைக்கும் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • பெரிதும் எதிர்பார்க்கப்படும் மோட்டோரோலா ரேஸ்ர் 1,24,999 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும், ஸ்மார்ட்போனுக்கு பரிமாற்றத்தில் 25000 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • IPhone XS 64GB வேரியண்டிற்கு ரூ.58,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதேவேளையில் IPhone 8-க்கு ரூ.36,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.