தீபாவளியில் இரு சக்கர வாகனங்களை வாங்கினால் அதிரடி தள்ளுபடி! 40000 ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வேண்டுமா?

Diwali Season Discount On Two Wheelers : பஜாஜ் ஆட்டோ, ஓலா மற்றும் பிற இரு சக்கர வாகன நிறுவனங்கள் தீபாவளி சீசனை முன்னிட்டு ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்குகின்றன...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 11, 2024, 02:16 PM IST
  • தீபாவளி சிறப்புத் தள்ளுபடி
  • இரு சக்கர வாகனங்களுக்கு அதிக தள்ளுபடி!
  • 40 ஆயிரம் ரூபாய் வரை சலுகை
தீபாவளியில் இரு சக்கர வாகனங்களை வாங்கினால் அதிரடி தள்ளுபடி! 40000 ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வேண்டுமா? title=

விழாக்களும் பண்டிகைகளும் களைக்கட்டியுள்ள இந்த பண்டிகை காலத்தில், பஜாஜ், OLA, TVS, Hero மற்றும் Ather போன்ற முன்னணி ஸ்கூட்டர் உற்பத்தியாளர்கள் தங்கள் மின்சார ஸ்கூட்டர் வரிசைகளில் மிகப்பெரிய தள்ளுபடிகள் மற்றும் பிரத்யேக சலுகைகளை வழங்குகின்றனர். விலைகள் குறைக்கப்பட்டு, கேஷ்பேக் சலுகைகள் மற்றும் கூடுதல் பலன்களுடன், மலிவு விலையில் ஸ்கூட்டரை வீட்டிற்கு கொண்டு வர இதுவே சரியான நேரம், பயன்படுத்திக்கொள்ள நீங்கள் ரெடியா? எந்த வாகனத்திற்கு எவ்வளவு தள்ளுபடி தெரிந்துக் கொள்வோம்.

TVS iQube - ரூ 27,300 வரை சேமிப்பு
TVS மோட்டார் iQube EV வரம்பில் பண்டிகைக்கால தள்ளுபடிகளை வழங்குகிறது. PM E-Drive கீழ், iQube ST 5.1 kWh தவிர அனைத்து iQube மாடல்களுக்கும் ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கும். நுழைவு-நிலை 2.2 kWh மாறுபாடு வாகனத்திற்கு, ரூ.17,300 கேஷ்பேக் உடன் சேர்த்து மொத்தம் ரூ. 27,300 தள்ளுபடி உண்டு.  iQube 3.4 kWh மற்றும் S 3.4 kWh உள்ளிட்ட பிற மாடல்கள் ரூ. 10,000 கேஷ்பேக் உடன் வருகின்றன, மேலும் ரூ. 5,999 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட 5 ஆண்டு அல்லது 70,000 கிமீ வாரண்டியும் உண்டு.

ஓலா எலக்ட்ரிக் - ரூ. 40,000 வரை தள்ளுபடி 
Ola S1 X 2kWh ஐ வெறும் 49,999 ரூபாய்க்கு வழங்குகிறது. S1 போர்ட்ஃபோலியோ முழுவதற்கும் ரூ.25,000 வரை தள்ளுபடிகள் கொடுக்கப்படும், மேலும் வாடிக்கையாளர்கள் இலவச ஹைப்பர்சார்ஜிங் கிரெடிட்கள், MoveOS+ மேம்படுத்தல் மற்றும் இலவச 8 ஆண்டுகள்/80,000 கிமீ பேட்டரி உத்தரவாதத்தை பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு EMI களில் ரூ. 5,000 வரையிலான பணச்சலுகைகள் மற்றும் ரூ. 40,000 வரையிலான மொத்த பண்டிகை சலுகைகளும் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | பார்சி மக்களின் உடல் எரிக்கவும் கூடாது, புதைக்கவும் கூடாது... ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது ஏன்?

ஏத்தர் 450X - ரூ. 25,000 வரையில் சலுகைகள்
Ather Energy அதன் பிரபலமான மாடல்களான Ather 450X மற்றும் 450X Apex மீது பண்டிகைக்கால தள்ளுபடிகளை வழங்குகிறது. ரூ.25,000 வரை மதிப்புள்ள பண்டிகைக்கால நன்மைகள், நீட்டிக்கப்பட்ட 8 வருட பேட்டரி உத்தரவாதம் கொடுக்கப்படுகிறது. ரூ.5,000 மதிப்புள்ள ஏத்தர் கிரிட் வழியாக ஒரு வருட இலவச சார்ஜிங்கும் பெறலாம். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ரூ.10,000 வரை கேஷ்பேக் பெறலாம்.

பஜாஜ் சேடக் - ரூ 20,000 வரை தள்ளுபடி
தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு மட்டும், பஜாஜ் தனது மின்சார ஸ்கூட்டரான பஜாஜ் சேடக் மீது ரூ.20,000 வரை பண்டிகைக்கால தள்ளுபடியை வழங்குகிறது. ரூ.1.15 லட்சத்தின் திருத்தப்பட்ட விலையானது அதன் அசல் ரூ.1.45 லட்சத்தில் இருந்து குறிப்பிடத்தக்க குறைப்பு ஆகும். இந்த சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை நீடிக்கும் வரை கிடைக்கும்.

ஹீரோ விடா - ரூ. 29,000 வரை சேமிப்பு
ஹீரோவின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரேஞ்ச், V1 பிளஸ் மற்றும் V1 ப்ரோ வகைகளைக் கொண்டுள்ளது, இ-காமர்ஸ் தளங்களில் செலுத்தப்படும் முழுப் பேமெண்ட்களில் ரூ. 28,000 வரை சேமிப்பு கிடைக்கும். EMI மூலம் வாங்கும்போது ரூ. 29,000 வரை சேமிக்க முடியும், இது இந்த பண்டிகைக் காலத்தில் லாபகரமான ஒப்பந்தமாக அமையலாம்.

ஹீரோ ப்ளேஷர் பிளஸ் - ரூ 71,213
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்றான ஹீரோ ப்ளேஷர் பிளஸ் கவர்ச்சிகரமான விலையில் ரூ.71,213 முதல் கிடைக்கிறது. Pleasure+ XTEC ZX Jubilant Yellow மாடலின் விலை ரூ. 80,113, மற்ற வகைகளான Pleasure+ LX மற்றும் VX ஆகியவை முறையே ரூ.71,213 மற்றும் ரூ.74,663க்கு கிடைக்கும்.

மேலும் படிக்க | Mozilla பயபடுத்துபவர்களுக்கு தரவு பாதுகாப்பு பிரச்சனை! அரசு சொல்லும் அதிரடி அலர்ட்! சைபர் எச்சரிக்கை...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News