OnePlus Ace 2 Pro: மூன்றே நிமிடங்களில் 'Sold Out'.... விவரக்குறிப்புகள் இதோ

OnePlus Ace 2 Pro: இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை அதிகம் இல்லை. மேலும் இதில் அட்டகாசமான பல அம்சங்களும் இருக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 25, 2023, 03:43 PM IST
  • சீன சமூக ஊடக தளமான வெய்போவில், தொலைபேசிக்கு பெறப்பட்ட நேர்மறையான ரெஸ்பான்சிற்கு நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்தது.
  • 200,000 யூனிட் தொலைபேசிகள் வெறும் 3 நிமிடங்களில் விற்கப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது.
  • இந்த போன் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
OnePlus Ace 2 Pro: மூன்றே நிமிடங்களில் 'Sold Out'.... விவரக்குறிப்புகள் இதோ title=

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் (OnePlus), ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோவை (OnePlus Ace 2 Pro) சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை அதிகம் இல்லை. மேலும் இதில் அட்டகாசமான பல அம்சங்களும் இருக்கின்றன. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 SoC, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் Sony IMX890 சென்சார் பயன்படுத்தும் முதன்மை 50MP கேமரா மற்றும் பயனர்களை ஈர்க்கக்கூடிய 150W வேகமாக சார்ஜ் செய்யும் திறன் போன்ற அற்புதமான அம்சங்களை இந்த ஃபோன் கொண்டுள்ளது. இந்த போன் விற்பனைக்கு வந்தவுடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விற்பனைக்கு வந்து 3 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டாக் தீர்ந்துவிட்டது என கூறப்படுகின்றது. இந்த போனின் விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சீன சமூக ஊடக தளமான வெய்போவில், தொலைபேசியில் பெறப்பட்ட நேர்மறையான ரெஸ்பான்சிற்கு நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்தது. 200,000 யூனிட் தொலைபேசிகள் வெறும் 3 நிமிடங்களில் விற்கப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்த போன் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. பயனர்கள் மத்தியில் இத்தகைய வரவேற்பை பெற்ற இந்த போனின் விவரக்குறிப்புகல் பற்றி இந்த பதிவில் காணலாம். 

OnePlus Ace 2 Pro: விவரக்குறிப்புகள்

OnePlus Ace 2 Pro ஸ்மார்ட்போன் 1.5K தெளிவுத்திறனுடன் (2772 x 1240 பிக்சல்கள்) 6.7-இன்ச் வளைந்த OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது மிருதுவான 450 PPIஐ வழங்குகிறது. டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதன் மையப்படுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் வடிவமைப்பு 10-பிட் HDR ஐ ஆதரிக்கிறது. மேலும் 1200 nits பிரகாசத்துடன் 1600 nits வரையிலான ப்ரைட்னஸ்ஸை இதன் மூலம் அடைய முடியும்.

இந்த போன் Qualcomm Snapdragon 8 Gen 2 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த தொலைபேசியில் LPDDR5x ரேம், UFS 4.0 சேமிப்பு மற்றும் கணிசமான 9140mm² VC கூலிங் சிஸ்டம் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ColorOS 13.1 இல் இயங்குகிறது. ஃபோன் மூன்று ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகளைப் பெறுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஜியோ பாரத் போன்: ஆகஸ்ட் 28 முதல் விற்பனைக்கு வருகிறது; அம்சங்கள், விலை முழு விவரம்

OnePlus Ace 2 Pro: பேட்டரி

OnePlus Ace 2 Pro ஆனது 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது OIS-உதவியுடன் கூடிய 50MP Sony IMX890 முதன்மை சென்சார், 8MP அல்ட்ரா-வைட் யூனிட் மற்றும் 2MP மேக்ரோ ஸ்னாப்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16MP முன் ஃப்ரெண்ட் ஃபேசிங் கேமரா உள்ளது. 

OnePlus Ace 2 Pro: இணைப்பு வசதி

OnePlus Ace 2 Pro ஸ்மார்ட்போன் இரட்டை சிம் ஆதரவு, WiFi 7, புளூடூத் 5.3, GNSS, NFC மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், டால்பி அட்மாஸ் ஆதரவுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஒரு ஐஆர் பிளாஸ்டர் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட எக்ஸ்-அச்சு அதிர்வு மோட்டார் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

கூடுதல் தகவல்

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் அதன் பயனர்களுக்கு 'கிரீன்-ஸ்கிரீன்' சிக்கலைச் சமாளிக்க வாழ்நாள் திரை உத்தரவாதத்தை (லைஃப்டைம் ஸ்க்ரீன் வாரண்டி) வழங்கியுள்ளது. அனைத்து மாடல்களும் இந்த வாரண்டியில் சேர்க்கப்பட்டுள்ளன என்று நிறுவனம் கூறியுள்ளது. எனினும் ஒன்பிளஸ் 8 ப்ரோ (OnePlus 8 Pro), ஒன்பிளஸ் 8டி (OnePlus 8T), ஒன்பிளஸ் 9 (OnePlus 9) மற்றும் ஒன்பிளஸ் 9ஆர் (OnePlus 9R) போன்ற மிகப் பழைய மாடல்கள் இதில் சேர்க்கப்படாது. உதிரி பாகங்கள், அதாவது ஸ்பேர் பார்ட்சின் குறைபாடு காரணமாக இந்த சாதனங்கள் சேர்க்கப்படவில்லை. 

மேலும் படிக்க | உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் 5 புதிய WhatsApp அம்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News