OnePlus-ன் புதிய மாடல் : விலை என்ன தெரியுமா.?

வரும் 31ஆம் தேதி OnePlus 10 Pro flagship 5G மாடல் மொபைன் ஃபோன் உலக அளவில் விற்பனைக்கு வரவுள்ளது. 

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 25, 2022, 12:30 PM IST
  • விற்பனைக்கு வரவுள்ள OnePlus-ன் புதிய மாடல்
  • இந்திய மதிப்பில் 55 ஆயிரம் இருக்கலாம்.?
  • அல்டிமேட் அப்டேட்டுகளுடன் OnePlus
OnePlus-ன் புதிய மாடல் : விலை என்ன தெரியுமா.?  title=

மொபைல் ஃபோன்கள் என்றாலே அதில் ஆர்வம் கொள்ளாத ஆட்கள் இருக்கவே முடியாது. உலக அளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிக அளவில் நேரம் செலவிடுவது மொபைல் ஃபோன்களுடன்தான் என்றால் அது மிகையாகாது. ஒரு ஃபோன் வாங்க வேண்டும் என்று நினைக்கும்போது, அதில் இருக்கக்கூடிய வசதிகள் என்ன, கேமராவின் தன்மை அட்டகாசமாக உள்ளதா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வாடிக்கையாளர்கள் நோட்டமிடுவார்கள்.

அவர்களின் எண்ணத்தையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் பெரும் நிறுவனங்கள் தங்களின் பல்வேறு தயாரிப்புகளை போட்டி போட்டுக்கொண்டு சந்தை படுத்தி வருகின்றனர். கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல் இருக்கும் இந்த நவீன உலகில் ஒரு சில நிறுவனங்களின் தயாரிப்புகள் மட்டும் வாடிக்கையாளர்களை மிக எளிதாக ஈர்த்துவிடும்.

மேலும் படிக்க | Tips & Tricks: போலி பான் கார்டை கண்டறிவது மிகவும் சுலபம்! எளிய வழிமுறைகள்

அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த மொபைல் ஃபோன் கம்பெனிகளில்  OnePlus முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் விற்பனையில் போட்டி போட்டும். அந்த வகையில் தற்போது, இந்த நிறுவனம் தனது புதிய மாடலான OnePlus 10 Pro flagship -பை வரும் 31ஆம் தேதி உலக அளவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த ஃபோன் லாஞ்ச் செய்யப்படவுள்ளது. ட்விட்டர் மற்றும் யூடியூப் தளங்களில் லாஞ்ச் நிகழ்ச்சியை நேரலையில் பார்க்க முடியும் எனவும் OnePlus-ன் சமூக வலைதளப்பக்கத்திலும் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை மொபைல் ஃபோன் கடந்த ஜனவரி மாதம் சைனாவில் முதன் முறையாக லாஞ்ச் செய்யப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதனை தொடர்ந்து இந்த ஃபோனை தற்போது உலகம் முழுவதும் சந்தை படுத்த அந்த நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் விலை தற்போது வரை அறிவிக்கப்படாத நிலையில் இந்தியாவில் சுமார் 55 ஆயிரம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4ஜி 5ஜி கணெக்டிவிட்டி,  5,000mAh Battery mAh battery,அதனுடன் 80W ஃபாஸ்ட் ஜார்ஜிங் கெபாசிட்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த OnePlus 10 Pro flagship வகை ஃபோனில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இந்த ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் உடனே டெலீட் செய்யவும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News