1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி லண்டனில் உள்ள தனது தாய் வழி உறவினர் வீட்டில் ராணி 2ஆம் எலிசபெத் பிறந்தார். ராணி எலிசெபெத் அரண்மனையில் பிறக்கவில்லை. மேலும், அவர் பிறந்த 17 Bruton Street என்ற கட்டிடம் இப்போது பிரபல சைனீஸ் உணவகமாக இயங்கி வருகிறது.
6 ஆம் கிங் ஜார்ஜ்ஜின் மறைவுக்குப் பின்னர் 1953 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி 25 வயதான 2 ஆம் எலிசபெத் இங்கிலாந்தின் ராணியாக முடிசூட்டப்பட்டார்.
பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் ஆட்சி புரிந்த அரச குடும்பத்தவர் என்ற புகழ் இங்கிலாந்து ராணி எலிசபெத் அடைந்துள்ளார். 70 ஆண்டுகள் 7 மாதங்கள் 2 நாட்கள் ராணி எலிசபெத் இங்கிலாந்து ராணியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதேபோல், அதிகளவிலான புகைப்படங்களை ரூபாய் நோட்டுகளில் பதித்த அரச குடும்பத்தினர் என்ற பெருமையும் எலிசெபெத் ராணிக்கே பொருந்தும்.
Beautiful remembrance of Queen Elizabeth II - RIP pic.twitter.com/ar5Mq2qKjK
— Cali2 (@WTP_USA1) September 9, 2022
The aging process of Queen Elizabeth II on banknotes.pic.twitter.com/7vbCxOWAz8
— Universal Curiosity (@UniverCurious) September 8, 2022
இவர் உலகிலேயே அதிக நாடுகளுக்கு பயணித்த அரச குடும்பத்தினர் என்ற பெருமையும் எலிசபெத் ராணிக்கு செல்லும். அவர் இதுவரை 6 கண்டங்களில் உள்ள சுமார் 120 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அதிலும் கனடா நாட்டிற்கு அதிக முறையாக 22 முறை பயணித்துள்ளார். பிரான்ஸ் நாட்டிற்கு 13 முறை பயணித்துள்ளார். ஆனால் ராணி இரண்டாம் எலிசபெத்திடம் அவர் மறையும் வரை எந்த நாட்டிற்குமான பாஸ்போர்ட் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க | இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்: பிரிட்டனின் சூரியன் அஸ்தமமானது
21 ஆயிரம் அரச குடும்ப திருமண நிச்சயதார்த்தங்களை இதுவரை ராணி எலிசபெத் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார். ராணி இரண்டாம் எலிசெபெத் ஆங்கிலத்தை போலவே பிரஞ்சு மொழியையும் சரளமாக பேசுவாராம். பல திருமண விருந்து நிகழ்வுகளில் அவர் பிரஞ்சு மொழியில் நண்பர்களுடன் உரையாடுவதை அவர் விரும்பி செய்வாராம்.
The London bridge has fallen
Rest is peace,
7 decades,15 prime ministers, 1 QUEEN its so sad cuz she’s been the only Queen for our lives #QueenElizabethII #LondonBridge #SHES DEAD #Queen Elizabeth II #QueenElizabeth #RIPQueen pic.twitter.com/qbveaPJP7p— lina (@luxlina_) September 8, 2022
நீல நிறம் பிடித்த நிறம். உடைகளும் ஆடை ஆபரணங்களும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும் என்பது ராணி எலிசெபத்தின் சிறப்பு பிரியம். அவரது ஆடை மற்றும் வெளியே செல்லும்போது அவர் செய்துகொள்ளும் அலங்காரங்களுக்காகவே அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் தனது உடைகளை பேஷன் காரணங்களுக்காக மட்டும் இல்லாமல் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடதக்கது.
எப்போதெல்லாம் அவரது வலது கையில் தனது ஹேண்டுபேக்கை மாற்றி பிடிக்கிறாரோ அப்போதெல்லாம் தனது பாதுகாவலர்களுக்கு நான் இங்கிருந்து கிளம்ப நினைக்கிறேன் என்று சிக்னல் தருவதாக அர்த்தமாம். அதேபோல் ஹேண்டுபேக்கை கீழே வைத்துவிட்டால் எதிர்நின்று பேசுபவரை அப்புறப்படுத்த வேண்டும் என்ற சிக்னல் அர்த்தமாம். இவ்வாறு பல்வேறு சிக்னல்களை தனது ஹேண்டுபேக் மூலம் ராணி எலிசெபெத் தருவார் என சில பாதுகாப்பு பணியாளர்கள் அறிதாக தெரிவித்ததுண்டு.
அவருக்கு கார்கி என்ற நாய் இனத்தை மிகவும் பிடிக்குமாம். சுமார் 30 கார்கி நாய்களை செல்லப்பிராணிகளாக அவர் வளர்த்து வந்துள்ளார்.
அவர் செல்லப்பிராணிகளாக கார்கி நாய்களை மட்டுமில்லாமல், யானை, ராட்சத ஆமைகள், ஜாக்குவார், ஸ்லோத்ஸ் எனப்படும் விலங்கையும் சொந்தமாக வைத்து வளர்த்து வந்தாராம்.
கார் ஓட்டுவது அவருக்கு பிடித்த செயல்களில் ஒன்றாம். மேலும், யு.கே நாட்டில் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்ட உரிமை உள்ள ஒரே ஒரு அரச குடும்பத்தவர் ராணி இரண்டாம் எலிசெபெத் தானாம். இரண்டாம் உலகப்போரின் போது அவர் ராணுவ வாகனத்தின் ஓட்டுநராக தன்னார்வத்துடன் பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது. இதன்மூலம் அவர் ராணுவத்திற்கு பணிபுரிந்த முதல் அரச குடும்ப பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அவரது பொழுதுபோக்கு என கூறினால், ஸ்டாம்ப் கலெக்ஷன், குதிரை சவாரி, புறா பந்தையம், கால்பந்து காணுதல் என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
1969 ஆம் ஆண்டு நிலவில் அப்பல்லோ 11 குழுவின் விண்வெளி வீரர்கள் கால் பதித்தபோது, அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க ராணி இரண்டாம் எலிசபத் தானது குறுஞ்செய்தியையும் அவர்களுடன் அனுப்பி வைத்தாராம். உலக தலைவர்கள் 78 பேருடைய வாழ்த்துச்செய்தியுடன் ராணி எலிசெபெத்தின் வாழ்த்து மடலும் ஒரு உலோகப்பெட்டியில் வைக்கப்பட்டு, நிலவிலேயே இப்போதும் புதைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
ராணி இரண்டாம் எலிசெபத் அவ்வப்போது சாதாரண உடைகளில் ஆடம்பரம் இல்லாமல் சக மணிதர்களை தெருகளில் சந்திப்பாராம். அப்போது அவர் சில முறை சுற்றுலா பயணிகளுடன் சகஜமாக பேசியுள்ளார் என்றும் அவரது பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு ஒரு முறை ஸ்காட்லேண்டு தெருவில் நடந்து செல்கையில், சுற்றுலா பயணி ஒருவருடன் பேசியதாகவும், அப்போது அவர் இங்கிலாந்து ராணியை கண்டதுண்டா என எலிசபத் ராணியிடம் கேட்டதாகவும், அதற்கு பதிலளித்த ராணி எலிசபெத், "தான் கண்டதில்லை.. ஆனால் இவர் சந்தித்திருக்கிறார்" என தனது பாதுகாவலரை கை நீட்டி காண்பித்ததாகவும் மெய் பாதுகாவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பாகுபலி-2: இங்கிலாந்து ராணிக்கு முதல் சிறப்புக் காட்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ