உங்கள் பெயரில் இருக்கும் போலி சிம்கார்டுகளை நீக்குவது எப்படி?

உங்கள் பெயரில் இருக்கும் போலி சிம் கார்டுகளை கண்டுபிடிப்பதுடன், அதனை நீக்குவதும் எளிது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 14, 2022, 01:59 PM IST
  • உங்கள் பெயரில் போலி சிம்கார்டா?
  • ஆதார் ஆவணமாக உள்ளதா?
  • எளிமையாக கண்டுபிடித்துவிடலாம்
உங்கள் பெயரில் இருக்கும் போலி சிம்கார்டுகளை நீக்குவது எப்படி? title=

ஆதார் அட்டை வங்கி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அடையாள அட்டையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் அட்டை, ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. ஆதாரை ஆவணமாக வைத்தே சிம்கார்டுகளும் வழங்கப்படுவதால், ஒரு ஆதாரில் எத்தனை சிம்கார்டுகள் வாங்கலாம்? போலி சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருந்தால் தெரிந்து கொள்வது எப்படி? போலி சிம் கார்டுகளை நீக்குவது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்வோம். 

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் இது குறித்த விளக்கத்தைக் கொடுத்துள்ளது. பிரத்யேகமாக ஆதார் மோசடிகளை தடுப்பதற்கென்று ஒரு இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. அந்த தளத்தில் இருந்து ஆதார் தொடர்பான மோசடிகளுக்கு விளக்கத்தையும், தீர்வையும் உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.  

மேலும் படிக்க | IRCTC eWallet பற்றி உங்களுக்கு தெரியுமா? நொடியில் டிக்கெட் முன்பதிவு

போலி சிம் கார்டுகளை கண்டுபிடிப்பது எப்படி?

* மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் இணையதளமான tafcop.dgtelecom.gov.in பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
* அதில் ஆதார் எண்ணில் இருக்கும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்
* இதன்பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்
* மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபியை அங்கு உள்ளிட வேண்டும். 
* இப்போது உங்களுக்கு உங்கள் ஆதாரைக் கொண்டு வாங்கப்பட்ட மொபைல் எண்கள் காண்பிக்கப்படும்
* ஒருவேளை நீங்கள் வாங்காத மொபைல் எண் அதில் இருந்தால், நீக்கவும் கோரலாம்.

ஒரு ஆதார் கார்டில் அதிகபட்சம் 9 மொபைல் எண்களை ஒருவர் வாங்கிக் கொள்ள முடியும். அவற்றில் நீங்கள் வாங்காத மொபைல் எண்கள், உங்கள் ஆதாரைக் கொண்டு வாங்கப்பட்டிருந்தால் ரிப்போர்ட் செய்து பிளாக் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகளும் tafcop இணையதளத்திலேயே இருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மட்டுமே இருக்கக்கூடிய இந்த அம்சம் விரைவில் இந்தியா முழுவதும் வர இருக்கிறது.

மேலும் படிக்க | Instaவில் இனி வீடியோ அப்லோடு செய்ய முடியாது! - வந்தாச்சு புது ரூல்ஸ்! நெட்டிசன்ஸ் குழப்பம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News