இந்திய ரயில்வேயின் புதிய சூப்பர் ஆப்: இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய நெட்வொர்க்காக உள்ள நிலையில், தினமும் ரயில்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் இதில் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வே பயணிகளின் வசதிகளை அதிகரிக்கும் வகையிலும் சிரமங்களை போக்கும் வகையிலும், புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்று சூப்பர் செயலி. ஆம், டிசம்பர் இறுதிக்குள் சூப்பர் செயலியை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்வேயின் இந்த புதிய சூப்பர் ஆப் உதவியுடன், டிக்கெட் முன்பதிவு அனுபவமே சிறப்பாக மாறப்போகிறது.
தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC ஆப் அல்லது இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும். ரயிலின் நிலையை அறிய அல்லது PNR சரிபார்க்க, மற்றொரு செயலியை பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்திய ரயில்வேயின் (Indian Railway) சூப்பர் ஆப் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதன் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு, உணவு விநியோகம் மற்றும் ரயில் நிலை ஆகியவற்றை ஒரே தளத்தில் சரிபார்க்கலாம். நடைமேடை டிக்கெட்டுகளையும் பெறலாம். இந்த வசதிகள் அனைத்தும் ஒரே தளத்தில் கிடைப்பது பயணிகளுக்கு பெரும் வசதியை அளிக்கும்.
IRCTC உடன் இணைக்கப்படும் புதிய செயலி
ரயில்வேக்கான தொழில்நுட்பப் பணிகளைச் செய்யும் அமைப்பான CRIS தயாரித்துள்ள இந்த செயலி டிக்கெட் முன்பதிவு இணையதளமான IRCTC உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பல வசதிகள் கிடைக்இது தவிர, தற்போது ஐஆர்சிடிசியின் ஆப் மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளின் ஆன்லைன் முன்பதிவு செய்யப்படுகிறது. புதிய ஆப் மூலம், அனைத்தையும் முறைப்படுத்தி, வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே ரயில்வேயின் திட்டம்.
டிசம்பர் இறுதிக்குள் அறிமுகம்
ரயில்வே சூப்பர் செயலியை டிசம்பர் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CRIS மற்றும் ரயில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு இடையேயான இடைமுகமாக IRCTC தொடர்ந்து செயல்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சூப்பர் ஆப் மற்றும் ஐஆர்சிடிசி இடையே ஒருங்கிணைக்கும் பணி திட்டமிட்ட முறையில் நடந்து வருகிறது.
தற்போது ரயில்வே பயணிகள் பயன்படுத்தும் செயலிகள்
இரயில் பயணிகள் தற்போது IRCTC Rail Connect (ரயில் டிக்கெட் முன்பதிவு, மாற்றங்கள் மற்றும் ரத்துசெய்தல்), IRCTC e-Catering Food on Track (ரயில் இருக்கையில் உணவு ஆர்டர் செய்வதற்கு), Rail Madad (புகார்கள் மற்றும் பரிந்துடைகள் அளிக்க), UTS (இருக்கை இல்லாமல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய) மற்றும் தேசிய ரயில் விசாரணை அமைப்பு (ரயிலின் நிலையை அறிய) போன்ற பல்வேறு ஆப்ஸ் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துகின்றனர்.
பயணிகள் அதிகம் பயன்படுத்தும் IRCTC செயலி
IRCTC Rail Connect ரயில் பயணிகளிடையே மிகவும் பிரபலமான செயலியாகும். இது 10 கோடிக்கும் அதிகமான பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான சிறந்த தளம் இதுதான். கடந்த ஆண்டு ஐஆர்சிடிசி ரூ.4,270 கோடி சம்பாதித்து ரூ.1,111 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்த வருவாயில் 30% டிக்கெட் முன்பதிவு மூலம் மட்டுமே வந்துள்ளது. UTS செயலி ஒரு கோடிக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப் முக்கியமாக பிளாட்பார்ம் டிக்கெட் மற்றும் சீசன் பாஸ்களை வாங்க பயன்படுகிறது. ரயில்வேயின் பல முக்கிய செயல்பாடுகளுக்கான மென்பொருளை CRIS உருவாக்கி பராமரிக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ